Actor Vijay: சண்டக்கோழி படத்தை ரிஜெக்ட் செய்த விஜய்.. அவரே பாராட்டவும் செய்தார்.. லிங்குசாமி பளீச்!
சென்னை: நடிகர் விஷாலின் கேரியரில் பெஸ்ட் படமாக அமைந்தது சண்டக்கோழி. இந்தப் படத்தில் விஷால், ராஜ்கிரண் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
இந்தப் படம் விஷாலுக்கு ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தை கொடுத்த படங்களில் முக்கியமானது.

இந்தப்படத்தை இயக்குநர் லிங்குசாமி டைரக்ட் செய்திருந்தார். தற்போது படம் வெளியாகி 18 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது.
சண்டக்கோழி படம்: நடிகர் விஷால் லீட் கேரக்டரில் நடித்து வெளியான சண்டக்கோழி படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தில் ராஜ்கிரண் முக்கியமான கேக்டரில் நடித்திருந்தார். படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்கியிருந்த நிலையில் அவருக்கும் படம் சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப் படம் வெளியாகி தற்போது 18 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது.
சூப்பர் ஹிட்டடித்த சண்டக்கோழி: கடந்த 2005ம் ஆண்டில் சண்டக்கோழி படம் வெளியானது. இந்தப் படத்தில் மீரா ஜாஸ்மீன் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அவரது குறும்புத்தனம் மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகச்சிறப்பான வகையில் உதவி செய்தது. இந்தப் படம் வெளியாகி 18 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் நடிகர் விஷால் தனது நெகிழ்ச்சியை பதிவு செய்திருந்தார்.
நடிகர் விஷால் நெகிழ்ச்சி: தமிழ் சினிமாவில் இந்தப் படம் தன்னுடைய வாழ்க்கையை ஆக்ஷன் ஹீரோவாக உருவாக்கியதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தப் படம் கொடுத்த உணர்வுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்திற்கு நன்றி மட்டும் போதாது என்றும் அவர் நெகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இந்தப் படம் 18 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது குறித்து இயக்குநர் லிங்குசாமியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
சண்டக்கோழி படத்தை நிராகரித்த விஜய்: இதுகுறித்து அவர் கொடுத்துள்ள பேட்டியில், முன்னதாக இந்தப் படத்தின் கதையை நடிகர் விஜய்யிடம் கூறியதாகவும். முதல் பாதி கதையை கேட்ட அவர் இரண்டாவது பாதியை கேட்கவில்லை என்றும் லிங்குசாமி தெரிவித்துள்ளார். ஆனால் இந்தப் படத்தில் ஹீரோவிற்கு நிகராக ராஜ்கிரண் கேரக்டரும் அமைந்திருந்ததால் இந்தப் படத்தில் நடிக்க அவர் ஆர்வம் காட்டவில்லை என்றும் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
பாராட்டிய விஜய்: இதையடுத்தே இந்தப் படத்தை விஷாலை வைத்து தான் இயக்கியதாகவும் தெரிவித்த லிங்குசாமி, இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் தன்னை சந்தித்த விஜய், சண்டக்கோழி படத்தை பார்த்ததாகவும் நன்றாக இருந்ததாகவும் கூறியதாக லிங்குசாமி தற்போது தெரிவித்துள்ளார். விஷால் போன்ற ஒருவர் கோலிவுட்டிற்கு அவசியம் என்றும் விஜய் தெரிவித்ததாக லிங்குசாமி கூறியுள்ளார்.
கோபம் தணிந்த லிங்குசாமி: முன்னதாக இந்தப் படத்தின் கதையை விஜய் முழுமையாக கேட்காததால் அவர்மீது ஒரு கோபம் இருந்ததாகவும் ஆனால் அவரே தன்னிடம் வந்து படம் குறித்தும் விஷால் குறித்தும் பாராட்டியது அவர் மீதான கோபத்தை நீக்கி மரியாதையை அதிகரித்ததாகவும் லிங்குசாமி தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். சண்டக்கோழி படத்தின் இரண்டாவது பாகமும் வெளியான நிலையில் முதல் பாகத்தை போன்ற அதிகமான வரவேற்பை அந்தப் படம் பெறத் தவறிவிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











