விரைவில் பாரதிராஜா பயோபிக்.. நீங்க ஒரு அதிசயம்.. லிங்குசாமி பேச்சு!

சென்னை: இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாவது போல, விரைவில் பாரதிராஜா பயோபிக் எடுக்கப்படும் என்று லிங்குசாமி கூறினார். இதில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் அனைவரும் நிச்சயம் நடிப்பார்கள் இது நிச்சயமா நடக்கும் என்று லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

பி.வி ஷங்கர் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு செய்திருக்கும் படம் கள்வன். இந்தப் படத்தில் ஜி.வி பிரகாஷ் , பாரதிராஜா , இவானா, தீனா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இதில் பேசி லிங்குசாமி, இந்த விழாவிற்கு நான் வருவதற்கு முக்கியமான காரணம் பாரதிராஜா சார் தான். அவருக்காக எந்த இடம் என்ன நேரம் என்றாலும் நாங்கள் வருவோம். ஏன் என்றால், அவருடைய படங்களை பார்த்த வளர்ந்தவர்கள் நாங்கள். அவரை பார்க்கும் போதெல்லாம், ஏதோ ஒரு காட்சியை சொல்லி அதை எப்படி எடுத்தீங்க என்று கேட்டுக்கொண்டே இருப்பேன்.

Director Lingusamy said at the function that Bharathiraja biopic will come soon

விரைவில் பாரதிராஜா பயோபிக்: பாரதிராஜாவைவும், அவரது இயக்கத்தையும் போற்றும் வகையில் ஒரு விழாவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நாங்கள் ரொம்ப நாட்களாக திட்டமிட்டுக் கொண்டே இருக்கிறோம் அது கூடிய விரைவில் நடக்கும். ஒரு விழாவில் தனுஷ், பாரதி ராஜாவை தனுஷ் செல்லம் என்று அழைத்தார். அவருக்கு மட்டுமில்லா அனைவருக்குமே அவர் செல்லம் தான். இளையராஜா பயோபிக் நிகழ்ச்சியில் பேசிய பலர் அவர் பாதுகாக்க வேண்டிய அதிசயம் என்று பேசினார்கள். அவர் மட்டுமில்ல நீங்களும் பாதுகாக்கப்பட வேண்டிய அதிசயம் தான். விரைவில் உங்களுடைய பயோபிக்கை ஒருவர் எடுப்பார். அதில் தமிழ் சினிமாவின் அனைத்து நடிகைகளும் வருவார்கள் கூறினார்.

Director Lingusamy said at the function that Bharathiraja biopic will come soon

பொல்லாதவன் தனுஷ் போல: தொடர்ந்து பேசிய அவர், ஜி.வி பிரகாஷ் தனது ரூட்டை மாற்றிவிட்டேன், களவன் படத்தின் டிரைலரை பார்க்கும் போது,அவரது நடிப்பு நிறைய மாறி இருப்பதை உணர முடிகிறது. தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்திற்கு இசையமைத்த போது தனுஷ் நடிப்பதை மறைந்து நின்று பார்த்து கற்றுக் கொண்டார் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தில் அவரது நடிப்பு பார்ப்பதற்கு பொல்லாதவன் படத்தில் தனுஷ் நடித்தது போல் இருக்கிறது. அந்த அளவிற்கு ரொம்ப அருமையாக நடிக்கிறார் . அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.

கள்வன் ஏப்ரலில் ரிலீஸ்: இசையமைப்பாளராக இருந்த ஜி.வி பிரகாஷ் குமார் நடிகராக மாறி அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். பி.வி ஷங்கர் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு செய்திருக்கும் படம் கள்வன். இந்தப் படத்தில் ஜி.வி பிரகாஷ் , பாரதிராஜா , இவானா, தீனா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 4ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. ஆக்‌ஷன் த்ரில்லர் ரொமான்ஸ் கலந்த படமாக கள்வன் படம் உருவாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X