எமோஷனல் சீனில் பல டேக்ஸ்.. திட்டி தீர்த்த லிங்குசாமி.. கேரவனில் கதறி அழுத பிரபல நடிகை.. பரபர தகவல்!

சென்னை: இயக்குநர் லிங்குசாமி திட்டியதால் நடிகை க்ரித்தி ஷெட்டி கேரவனில் அமர்ந்து கதறியழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. தொடர்ந்து ரன், ஜி, சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி ஆகிய வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

தற்போது தெலுங்கில் முதல் முறையாக படம் ஒன்றை இயக்கவுள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை லிங்குசாமி இயக்குகிறார்.

தமிழ் தெலுங்கு என 2 மொழிகளில்

தமிழ் தெலுங்கு என 2 மொழிகளில்

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக உள்ளது. ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். இப்படம் RAPO19 என்று குறிப்பிடப்பட்டு வருகிறது.

ராம் பொத்தினேனிக்கு ஆதி வில்லன்

ராம் பொத்தினேனிக்கு ஆதி வில்லன்

ஆக்ஷன் படமாக உருவாகவுள்ள இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் ஈரம், மிருகம், அய்யனார், அரவாண் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஆதி நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக நடிகர் ஆதிக்கு 4 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

படத்தில் இரண்டு ஹீரோயின்கள்

படத்தில் இரண்டு ஹீரோயின்கள்

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைத்ராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஆதி இதுவரை கண்டிராத அவதாரத்தில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள் உள்ளனர். ஒருவர் உப்பென்னா நாயகி க்ரித்தி ஷெட்டி. மற்றொருவர் அக்ஷரா கவுடா ஆவார். ராம் பொத்தினேனியும் கிரித்தி ஷெட்டியும் ஒரு ஜோடி என தெரிகிறது.

நடிகையை விளாசிய இயக்குநர்

நடிகையை விளாசிய இயக்குநர்

அக்ஷரா கவுடா படத்தில் வில்லனான ஆதி பினிசெட்டிக்கு ஜோடியாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடந்த பரபரப்பு சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இயக்குநர் லிங்குசாமி படப்பிடிப்பு செட்டில் உப்பேனா நடிகை கிரித்தி ஷெட்டியை விளாசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

எமோஷனல் காட்சிக்கு ஏகப்பட்ட சீன்ஸ்

எமோஷனல் காட்சிக்கு ஏகப்பட்ட சீன்ஸ்

அதாவது இயக்குநர் லிங்குசாமி, நடிகை க்ரித்தி ஷெட்டியை வைத்து எமோஷனல் காட்சிகளை படமாக்கியுள்ளார். அப்போது லிங்குசாமி எதிர்பார்த்த காட்சியை நடிகை க்ரித்தி ஷெட்டியால் சரியாக நடித்து கொடுக்க முடியவில்லையாம். பல ரீடேக்களை வாங்கியும் சொதப்பி கொண்டே இருந்தாராம் க்ரித்தி ஷெட்டி.

கடுப்பான நடிகர் நாசர்

கடுப்பான நடிகர் நாசர்

க்ரித்தி ஷெட்டியால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பொறுமையாக காத்திருந்த நடிகர் நாசர் ஒரு கட்டத்தில் பொறுமையிழக்கத் தொடங்கி விட்டாராம். பின்னர் லிங்குசாமியும் பொறுமையை இழந்து அனைவரின் முன்னிலையிலும் செட்டில் க்ரித்தி ஷெட்டி மீது எரிந்து விழுந்து திட்டி தீர்த்துள்ளார்.

கேரவனுக்குள் சென்ற கதறிய நடிகை

கேரவனுக்குள் சென்ற கதறிய நடிகை

இதனால் மனமுடைந்து போன நடிகை க்ரித்தி ஷெட்டி கேரவனுக்குள் சென்று கதறி அழுதாராம். இயக்குநர் லிங்குசாமி பல டேக்குகள் வாங்கிய நடிகையை செட்டில் அனைவரின் முன்பும் திட்டி தீர்த்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஸ்ரீனிவாச சித்தூரி இப்படத்தை தயாரிக்கிறார் இது ஒரு கமர்ஷியல் பொழுது போக்கு படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X