Ajith - அந்தக் கதை அஜித்துக்கு பிடிக்கவில்லை.. இருந்தாலும் நடித்துக்கொடுத்தார்.. லிங்குசாமி ஓபன் டாக்

சென்னை: Ajith (அஜித்) ஜி படத்தின் கதை அஜித்துக்கு பிடிக்காவிட்டாலும் அதில் நடித்துக்கொடுத்தார் என்று இயக்குநர் லிங்குசாமி தெரிவித்திருக்கிறார்.

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவர் அஜித்குமார். யாரின் துணையும் இல்லாமல் திறமையின் துணையோடு திரையுலகத்துக்குள் நுழைந்த அவர் தன்னம்பிக்கையோடு போராடியவர். பல தோல்வி படங்களை கொடுத்தாலும் ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் கற்றுகொண்டு அதிலிருந்து மீண்டார். அதனாலேயே அவருக்கு ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள்.

Director Lingusamy Shared his experience With Actor Ajithkumar

மன்றம் கலைப்பு: குறிப்பாக எந்த நடிகரும் செய்ய துணியாததை அஜித் செய்தார். அதாவது தனது ரசிகர் மன்றங்களை அவர் கலைத்தபோது கண்டிப்பாக இது அஜித்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் என பலரும் கூறினார்கள். ஆனால் மன்றம் கலைத்த பிறகு வெளியான மங்காத்தா படம் மிகப்பெரிய ஓபனிங்கை பெற்றது குறிப்பிடத்தக்கது. அது ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சரியப்படுத்தியது.

துணிவு: அவரது நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. ஹெச்.வினோத் இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதிலும் போட்டியாக களமிறங்கிய வாரிசு படத்தை காலி செய்ததால் ஏகே ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அஜித்தும் அதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவே கூறப்படுகிறது.

விடாமுயற்சி: துணிவு படத்தை முடித்திருக்கும் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தை லைகா தயாரிக்க மகிழ் திருமேனி இயக்குகிறார். த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் அஜித்துடன் நடிப்பதாக கூறப்படுகிறது. அஜர்பைஜானில் தற்போது படத்தின் இரண்டாவது கட்ட ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

ஜி: இதற்கிடையே அஜித்தின் கரியரிலேயே மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்திருந்தது என்றால் ஜி. அதனை இயக்கியவர் லிங்குசாமி. அந்தப் படம் குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "ஜி படத்தின் கதையை ஷூட்டிங் செல்வதற்கு முதல் நாள்தான் அஜித் கேட்டார். கதையை கேட்டுவிட்டு இந்தக் கதை எனக்கு பிடிக்கவில்லை என்று ஓபனாகவே சொல்லிவிட்டார்.

சமாதானம்: ஆனால் தயாரிப்பாளரும், என்னுடன் இருந்த சிலரும் அஜித்திடம் சென்று கண்டிப்பாக இந்தப் படம் ஒர்க் அவுட் ஆகும் என்று சொல்லி சமாதானம் செய்து ஒத்துக்கொள்ள வைத்தனர். முதலில் இந்தப் படத்தில் சித்தார்த் அல்லது மாதவன் ஆகியோரைத்தான் ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்றிருந்தேன். அஜிது இப்படத்துக்கு செட் ஆவாரா என்ற சந்தேகமும் இருந்தது. கதை பிடிக்காவிட்டாலும் நடித்துக்கொடுத்தார். அஜித் கணித்தபடியே ஜி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X