Lingusamy - விஜய் மீது கோபத்தில் இருந்த லிங்குசாமி.. அதற்கு அவரோட ரியாக்ஷன் இதுதான்.. முழு விவரம் உள்ளே
சென்னை: Vijay (விஜய்) விஜய் மீது கோபத்தில் இருந்ததாக இயக்குநர் லிங்குசாமி ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
ஆனந்தம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் லிங்குசாமி. முதல் படத்தை குடும்பங்கள் கொண்டாடும் படமாக எடுத்து அதில் வெற்றியும் பெற்றார். அதனையடுத்து அவர் இயக்கிய ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட படங்கள் பக்கா கமர்ஷியல் ஹிட்டாகின. குறிப்பாக ரன் படம் சாக்லேட் பாய் என்ற இமேஜிலிருந்து மாதவனை வெளியே கொண்டு வந்தது. அதேபோல் அவர் இயக்கிய சண்டக்கோழி படம் விஷாலின் கரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

அஞ்சானில் விழுந்த அடி: முன்னணி இயக்குநராக வலம் வந்த லிங்குசாமி சூர்யா, சமந்தா நடிப்பில் உருவான அஞ்சான் படத்தில் சறுக்கினார். படத்துக்கு முன்பாக அவர் கொடுத்த பேட்டி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. ஆனால் படம் சுமாராக இருந்ததால் லிங்குசாமியை வறுத்தெடுத்தனர் ரசிகர்கள். அப்போது விழுந்தவர் இன்றுவரை எழவில்லை. மேலும் உத்தமவில்லனும் படுதோல்வியை சந்தித்ததால் இக்கட்டான நிலைக்கு சென்றால் லிங்குசாமி.
சண்டக்கோழி: இப்போது ஃபார்ம் அவுட் ஆகியிருக்கும் லிங்குசாமி ஒருகாலத்தில் பெரும் ஃபார்மில் இருந்தவர். குறிப்பாக ரன், சண்டக்கோழி ஆகிய படங்கள் அவரது கரியரில் மெகா ஹிட் படங்களாக அமைந்தவை. இந்த சூழலில் சண்டக்கோழி படம் குறித்து லிங்குசாமி பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
லிங்குசாமி பேட்டி: அந்தப் படம் வெளியாகி 18 வருடங்கள் நிறைவு அடைந்ததை அடுத்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், "சண்டக்கோழி கதையை முதலில் விஜய்யிடம்தான் சொன்னேன். முதல் பாதிவரை ஆர்வமாக கேட்டார். கதையில் ராஜ் கிரண் என்ட்ரி வந்ததும் கதை கேட்பதை நிறுத்திவிட்டார். எவ்வளவோ சொல்லியும் இரண்டாம் பாதியை அவர் கேட்கவில்லை.
படம் ரிலீஸாகி வெற்றியடைந்ததை அடுத்து அதன் வெற்றி விழா லீ மெரிடியன் ஹோட்டலில் நடந்தது. அப்போது விஜய்யும் அங்கு வந்திருந்தார். என்னை பார்த்து நேராக வந்து படம் பார்த்தேன் சூப்பராக இருந்தது என்றார். நான் அவர் மீது அப்போது கோபத்தில் இருந்தேன். ஏனெனில் அந்த இரண்டாம் பாதி கதையை அவர் கேட்கவில்லை. நான் அவரிடம், நீங்கள்தான் இரண்டாம் பாதியை கேட்கவே இல்லையே என்றேன். அதற்கு அவரோ அட விடுங்க. இதுதான் கரெக்ட். இப்படி ஒருத்தர் (விஷால்) ஃபீல்டுக்கு வரணும்னு இருந்துருக்கும் என சொன்னதாக லிங்குசாமி குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











