Lokesh Kanagaraj: போன வருஷம் மாஸ்டர்.. இந்த வருஷம் விக்ரம்.. நெகிழ்ச்சியில் லோகேஷ்!
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடித்துவரும் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.
கடந்த ஆண்டில் மாஸ்டர் படத்திற்காக பெஸ்ட் டைரக்டருக்கான சைமா விருதை பெற்றிருந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் தற்போது விக்ரம் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான சைமா விருதை லோகேஷ் கனகராஜ் பெற்றுள்ளார்.

சைமா 2023 விருது பெற்ற லோகேஷ் கனகராஜ்: இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சினிமா பயணம் மாநகரம் படத்தில் துவங்கியது. முதல் படத்திலேயே அனைத்து தரப்பினரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் லோகேஷ். இந்தப் படத்தை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இந்தப் படத்தில் குடிகாரனாக காட்டப்பட்ட விஜய்யின் கேரக்டர் வித்தியாசமாக காணப்பட்டது. வித்தியாசத்தை எப்போதும் விரும்பும் விஜய்க்கு இந்தப் படம் சிறப்பாக அமைந்தது.
மாஸ்டர் படம் தன்னுடைய 100 சதவிகித படம் இல்லை என்றும் விஜய்க்காக சில சமரசங்களை செய்துக் கொண்டதாகவும் தன்னுடைய 50 சதவிகித ஸ்டைலை மட்டுமே அந்தப் படத்தில் வெளிப்படுத்தியதாகவும் லோகேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக விஜய்யுடன் லியோ படத்தில் கூட்டணி அமைத்துள்ளார் லோகேஷ். இந்தப் படம் தன்னுடைய 100 சதவிகித ஸ்டைலில் வெளியாகவுள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டில் மாஸ்டர் படத்திற்காக லோகேஷ் கனகராஜிற்கு சிறந்த இயக்குநருக்கான சைமா விருது கிடைத்தது. இந்நிலையில் தற்போது சைமா விருதுகள் 2023 விருதுகள் விழா நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. இதில் விக்ரம் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருதை தட்டித் தூக்கியுள்ளார் லோகேஷ். கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான விக்ரம் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது.
இந்தப் படத்தில் ஒரு ரசிகனாக கமல்ஹாசனை சிறப்பாக வெளிக் கொண்டு வந்திருந்தார் லோகேஷ். இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை அவருக்கு சர்வதேச அளவில் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் சிறந்த இயக்குநருக்கான சைமா 2023 விருதை பெற்றுள்ள லோகேஷ் கனகராஜ், கடந்த ஆண்டில் மாஸ்டர் படத்திற்காக சைமா விருதை பெற்றதாகவும் இந்த ஆண்டில் விக்ரம் படத்திற்காக சைமா விருது கிடைத்துள்ளதாகவும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் கமல்ஹாசன் மற்றும் தன்னுடைய மற்ற தயாரிப்பாளர்களுக்கும் அவர் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த தருணத்தில் லியோ குறித்தும் அவர் பேசியுள்ளார். லியோ படத்தில் அதிகமான வேலைகளை மேற்கொள்ளவுள்ளதால், சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட திட்டமிட்டதாக அவர் கூறியுள்ளார். இன்றைய தினம் படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்று மாலை லியோ படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளது. படத்தின் இரண்டாவது சிங்கிளாகத்தான் அது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











