Lokesh Kanagaraj: பிரபாசுடன் இணையும் லோகேஷ்.. அக்டோபரில் அறிவிப்பு?
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படம் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், லோகேஷின் அடுத்தப்படம் குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
லோகேஷ் ரஜினியின் 171 படத்தை அடுத்ததாக இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இடை நுழைந்துள்ளார் பிரபாஸ்.

பிரபாசை இயக்கும் லோகேஷ் கனகராஜ்: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத் என நட்சத்திர பட்டாளங்களுடன் லியோ படத்தில் களமிறங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தின் சூட்டிங் சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு தற்போது வெளிநாட்டில் சுற்றுலா கொண்டாட்டத்தில் உள்ளார் விஜய்.
இந்தப் படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் இணையவுள்ளார். விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட்கள் வெளியாகவுள்ளதாக வெங்கட் பிரபு தனது சமீபத்திய ட்விட்டர் பதிவில் வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பு வெறித்தனமாக இருக்கும் என்றும் ரசிகர்களை காத்திருங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில், இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினியின் தலைவர் 171 படத்தில் லோகேஷ் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
தற்போது ரஜினி நடிப்பில் ஜெயிலர் படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள நிலையில், அவர் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்திலும் கேமியோ ரோலில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தப்படத்திற்காக இணையவுள்ளார். இந்தப் படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர்171 படத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டில்தான் துவங்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இடைப்பட்ட மாதங்களில் நடிகர் பிரபாசுடன் லோகேஷ் கனகராஜ் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாகவே லோகேஷ் -பிரபாஸ் கூட்டணி குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியானவண்ணம் இருந்தது.
இந்நிலையில் லோகேஷ் -பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் இந்த பிரம்மாண்ட பான் இந்தியா படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பு லியோ படத்தின் ரிலீசை தொடர்ந்து வரும் அக்டோபர் 23ம் தேதி பிரபாஸ் பிறந்தநாளில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











