இன்னும் 5 வருஷத்துக்கு நோ ரொமான்ஸ்.. என்ன லோகேஷ் கனகராஜ் இப்படி சொல்லிட்டாரு!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜின் திரைப்பயணம் மாநகரம் படத்தில்தான் துவங்கியது. முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை தன்பக்கம் இழுத்திருந்தார் லோகேஷ். அடுத்தடுத்த அவரது படங்கள் அனைத்துமே ரசிகர்களை கட்டிப் போட்டு வருகின்றன. தற்போது நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட நிலையில் தற்போது உடல்நல பாதிப்பால் வீட்டில் ரஜினி ஓய்வெடுத்துவரும் நிலையில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்கப்பட உள்ளதாக லோகேஷ் கனகராஜ் முன்னதாக தன்னுடைய பேட்டியில் தெளிவுப்படுத்தியுள்ளார்.

rajinikanth coolie movie lokesh kanagaraj

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: இயக்குனர் லோகேஷ் கனகராஜின் திரைப்பயணம் மாநகரம் படத்தில் துவங்கியது. முதல் படத்திலிருந்து சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்த படங்களில் மாஸ் ஹிட்களை கொடுத்து வருகிறார். மாநகரம் படத்தை தொடர்ந்து அடுத்த படமே அதிரடி சரவெடியாக கார்த்தியுடன் கைதி படம் அமைந்தது. இந்த படம் ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து படமாக்கப்பட்டிருந்தது. நேர்த்தியான கதைக்களத்தை கொண்டிருந்த இந்த படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது.

அடுத்தடுத்த படங்கள்: கைதி படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் படத்தை கொடுத்து ரசிகர்களை கவர்ந்த நிலையில் கமல்ஹாசனுக்கும் விக்ரம் படம் சிறப்பாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து விஜய்யை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு இரண்டாவது முறையாக கதவை தட்டியது. முன்னதாக மாஸ்டர் படத்தை விஜய்யுடன் கொடுத்திருந்த லோகேஷ் கனகராஜ், கடந்த ஆண்டில் வெளியான லியோ படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக கொடுத்திருந்தார். இருந்தபோதிலும் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் தற்போது ரஜினிகாந்தின் கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ்.

16ம் தேதி துவங்கும் கூலி சூட்டிங்: இந்த படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தின் சூட்டிங் சிறிது நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் வரும் அக்டோபர் 16ஆம் தேதி படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்க உள்ளதாகவும் முன்னதாக தன்னுடைய பேட்டியொன்றில் லோகேஷ் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய பேட்டியொன்றில் தன்னுடைய கேரியரின் பல சுவாரசியங்களை அவர் பகிர்ந்துள்ளார். இதன்போது அவரிடம் ரத்தம், ஆயுதங்கள் போதைப்பொருட்கள் இல்லாத ஒரு அழகான காதல் கதையை கொடுப்பாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

5 ஆண்டுகளுக்கு நோ ரொமான்ஸ்: அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், தனக்கே தெரியாமல் தான் இது போன்றதொரு விஷயத்தில் சிக்கிக் கொண்டதாகவும் அடுத்தடுத்த படங்களின் கமிட்மெண்ட் உள்ளதால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரொமான்ஸ் படங்கள் எடுப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தன்னுடைய படங்களிலும் காதல் காட்சிகளை குறைவாகவே சேர்ப்பார் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக இவரது படங்களில் வரும் ஹீரோயின்கள் உயிரிழப்பது வாடிக்கையாக அமைந்து வருகிறது. அந்த வகையில் ரொமான்ஸ் படங்களை தான் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இயக்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளது கவனத்தை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X