கண்டிப்பாக நடக்கும்... அஜித் பற்றி லோகேஷ் கனகராஜ் எவ்வளவு நம்பிக்கையா பேசியிருக்காரு பாருங்க!

சென்னை : நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி இணைந்து மிரட்டியுள்ள விக்ரம் படம் வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்திய அளவில் மொத்தம் 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது.

விக்ரம் படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

விக்ரம் படம்

விக்ரம் படம்

நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது விக்ரம் படம். இந்தப் படம் வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்கான பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் சிறப்பாக ஈடுபட்டுள்ளனர்.

5 மொழிகளில் ரிலீஸ்

5 மொழிகளில் ரிலீஸ்

படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது. வெளிநாடுகளிலும் படத்தின் சிறப்பான ரிலீசுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்காக சரக்கு ரயில்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

கேன்சில் திரையிடப்பட்ட ட்ரெயிலர்

கேன்சில் திரையிடப்பட்ட ட்ரெயிலர்

மேலும் படத்தின் ட்ரெயிலர் கேன்ஸ் படவிழாவில் திரையிடப்பட்டது. இது படத்திற்கான வெளிநாட்டு பிரமோஷன்களுக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேன்சில் திரையிடப்பட்ட இந்த ட்ரெயிலருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர்.

சிறப்பான பிரமோஷன்கள்

சிறப்பான பிரமோஷன்கள்

இதனிடையே படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இரு தினங்களுக்கு முன்பு கேரளாவில் செய்தியாளர்களை சந்தித்த விக்ரம் படக்குழு நேற்றைய தினம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளது.

பல ஆச்சர்யங்கள்

பல ஆச்சர்யங்கள்

கமல், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டவர்கள் படம் குறித்த பல பேட்டிகளை தொடர்ந்து அளித்து வருகின்றனர். படத்தில் சூர்யாவின் கேரக்டர் மட்டுமில்லாமல் பல சர்ப்பிரைஸ்கள் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தனது விக்ரம் 3 படத்தையும் லோகேஷ் தான் இயக்கவுள்ளதாக கமல்ஹாசன் பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அஜித் குறித்த கேள்வி

அஜித் குறித்த கேள்வி

முன்னதாக மாநகரம் என்ற வெற்றிப் படத்தை கொடுத்த லோகேஷ் தொடர்ந்து கார்த்தி, விஜய் மற்றும் கமல் என முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி தன்னை உலகத்தரத்திற்கு உயர்த்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் அஜித்தை வைத்து படமியக்குவாரா என்ற கேள்வி அவரிடம் பேட்டியொன்றில் எழுப்பப்பட்டது.

கண்டிப்பாக நடக்கும்

கண்டிப்பாக நடக்கும்

அதற்கு பதிலளித்த அவர், கண்டிப்பாக இயக்குவேன் என்றும் கதையும் நேரமும் கூடிவரும்போது இது கண்டிப்பாக நடக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தை மிகவும் சிறப்பாக இயக்கியுள்ளதாக கமல் பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X