லோகேஷை பாடாய்படுத்திய லியோ.. இரண்டாம் பாதி சொதப்பல்.. ஓபனாக மேடையில் சொன்ன அந்த வார்த்தை!
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ், லியோ படத்தின் இரண்டாம் பாதி சொதப்பல் என எழுந்து வரும் விமர்சனத்திற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

இதில், கார்த்தி, ராஜுமுருகன், தயாரிப்பாளர் எஸ். ஆர்.பிரபு, அனு இமானுவேல்,லோகேஷ் கனகராஜ் என பலர் கலந்து கொண்டனர்.
லோகேஷ் கனகராஜ் பேச்சு: இந்த விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ், லியோ படம் மக்களுக்கு பிடித்து இருக்கிறது. திரையரங்கிற்கு மக்கள் வருவதை பார்க்க முடிகிறது. ஆனால் லியோ படத்தின் இரண்டாம் பாதியில் லாகிங் இருப்பதாக விமர்சனங்கள் வருகிறது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இப்போது தான் நான் ஊரில் இருந்து வருகிறேன். படம் வெளியானதும் என் வேலை முடிந்துவிட்டது. படத்தின் வசூல் என்பது, எனக்கு தெரியாது, இனிமேல் தான் அதைப்பற்றி தயாரிப்பாளரிடம் கேட்க வேண்டும்.
தலைவர் 171 அப்டேட்: லியோ படத்தின் வெளியீட்டின் போது லோகேஷுக்கும் விஜய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக இணையத்தில் பரவி வரும் செய்தி குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அவர், இந்த செய்தி எல்லாம் எங்கே இருந்து வருகிறது என்று தெரியவில்லை என்றார். மேலும் தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றார்.
கலவையான விமர்சனம்: நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம், அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இப்படத்திற்கு பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும், படத்தின் வசூலில் அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
லியோ வசூல்: லியோ படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ. 140 கோடிக்கு மேல் வசூலித்ததாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் பின் முதல் வார முடிவில் உலகளவில் ரூ.461 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு வாரத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











