Lokesh Kanagaraj: லியோ படத்தை சேர்த்த லோகேஷ் கனகராஜ்.. வதந்திகளுக்கெல்லாம் முடிவு!
சென்னை: நடிகர் விஜய் -லோகேஷ் காம்பினேஷனில் உருவாகியுள்ள லியோ படம் இன்னும் சில தினங்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்தப்படத்தில் இரண்டாவது முறையாக விஜய் -லோகேஷ் கூட்டணி இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
நேற்றைய தினம் வெளியாகியுள்ள படத்தின் ட்ரெயிலர் மிரட்டலான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.
லியோ படத்தை சமூகவலைதளத்தில் சேர்த்த லோகேஷ் கனகராஜ்: நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படம் வரும் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகளவில் காணப்படுகிறது. வெளிநாடுகளில் இந்தப் படத்தின் புக்கிங் 6 வாரங்களுக்கு முன்பே துவங்கிய நிலையில், இதுவரை இல்லாதவகையில் 40,000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்துள்ளன.

கடந்த சில தினங்களாகவே இந்தப் படத்திற்கான ப்ரமோஷன்கள் மிகச்சிறப்பான வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து போஸ்டர்கள், கிளிம்ப்ஸ், பாடல்கள் என அடுத்தடுத்த அப்டேட்களை கொடுத்து ரசிகர்களை தொடர்ந்து படக்குழு உற்சாகப்படுத்தி வருகிறது. இதனிடையே நேற்றைய தினம் வெளியான படத்தின் ட்ரெயிலரும் ரசிகர்களிடையே மரண மாஸாக வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது.
முன்னதாக கடந்த மாதம் 30ம் தேதி படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அதிகப்படியான ரசிகர்கள் வரும் நிலையில், அதை சமாளிக்க முடியாது என்பது உள்ளிட்ட காரணங்களால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் விஜய்யும் அப்செட்டில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது படத்தின் சென்சாரும் நடத்தி முடிக்கப்பட்டு, படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது.
முன்னதாக தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் லியோ படத்தை சேர்க்காமல் இருந்தார் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதனால், அவர் படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் அவருக்கும் விஜய்க்கும் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாகவும் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டன. இதுகுறித்து லோகேஷ் கனகராஜோ, விஜய்யோ எந்தவிதமான விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில் தற்போது படத்தின் சென்சார் முடிக்கப்பட்டுள்ள நிலையில், படம் ரிலீசுக்கு முழுமையாக தயாராகியுள்ளது.
இதையடுத்து தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் லியோ படத்தையும் இணைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். ஒவ்வொரு படத்தையும் அது முழுமையாக நிறைவடைந்தவுடன் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் இணைக்கும் வழிமுறையை மேற்கொண்டு வருகிறார் லோகேஷ். அந்த வகையில் தற்போது லியோ படமும் ரிலீசுக்கு முழுமையாக தயாராகியுள்ள நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் இணைத்துள்ளார். இதன்மூலம் லியோ படம் குறித்த வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











