மீண்டும் லோகேஷுடன் இணைகிறாரா தளபதி விஜய்!?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த படம் மாஸ்டர்.
நீண்ட எதிர்பார்ப்பும், இடைவெளிக்கும் பின் வெளியான மாஸ்டர் எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பையே பெற்றது.
இதை தொடர்ந்து லோகேஷுடன் மீண்டும் விஜய் #தளபதி66 படத்திற்காக இணையவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

வெற்றி படங்கள்
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர் என இயக்கிய 3 படங்களிலும் தனது தனித்துவத்தை காட்டி ரசிகர்களை கவர்ந்தார். மூன்று படங்களும் பெரிய வெற்றியை பெற அடுத்ததாக கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கவுள்ளார்.

வசூல் மழை
கொரோனா தொற்று காரணமாக தள்ளி போன மாஸ்டர் ஒரு வழியாக பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 13 அன்று வெளியாகியது. நீண்ட காலமாக ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் காணப்பட்ட திரையரங்குகள் மாஸ்டர் படத்தால் திருவிழா கோலம் பூண்டது. வசூல் மழையும் பொழிந்தது.

டிரேடிங் உதவி
மாஸ்டர் படத்திற்கு பிறகு திரையரங்குகளில் வெளியான எந்த படமும் பெரிதாக வசூலில் சோபிக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். இதன் காரணமாக டிரேடிங்கை அதிகரித்து உதவ தளபதி விஜய் அடுத்த ஆண்டில் மூன்று படங்களில் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களிடையில் சொல்லப்படுகிறது.

தேனாண்டாள் பிலிம்ஸ்
தளபதி65 படத்திற்கு பிறகு தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் நியாயமான பட்ஜெட்டைக் கொண்ட ஒரு சிறிய படத்திற்கு லோகேஷ் - விஜய் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. இது அதிகாரப்பூர்வ தகவலாக இல்லாமல் இருந்தாலும், இந்த செய்தி ரசிகர்களின் விருப்பமாகவும் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











