Lokesh kanagaraj: கைதி 2 மட்டுமில்லீங்க.. இனி எல்லா படத்துலயும் LCU இருக்கும்.. லோகேஷ் உறுதி!

சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது லியோ படம்.

கடந்த 10 நாட்களில் இந்தப் படத்தின் வசூல் சர்வதேச அளவில் 500 கோடிகளை தொட்டுள்ளது. இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Director Lokesh kanagaraj assured that in his next movies there is a LCU connection

இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாக படத்தில் LCU இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

லியோ படம்: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது லியோ படம். இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் ரிலீசான நிலையில், படத்தின் இரண்டாவது பாதி ரசிகர்களை கவர தவறியுள்ளது. இதையடுத்து படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. இருந்த போதிலும் 10 நாட்களை கடந்து திரையரங்குகளில் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இரு கெட்டப்புகளில் விஜய்: இந்தப் படத்தில் பார்த்திபன் மற்றும் லியோ தாஸ் என இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடித்திருந்த நிலையில், விஜய் படங்களுக்கேயுரிய காமெடி, சென்டிமெண்ட் போன்றவை அதிகமாக இல்லாமல் ஆக்ஷனை மட்டுமே நம்பி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் படமாக இருந்தாலும் அதை ரசிகர்களின் ரசனைக்கேற்ப கொடுப்பதில் இந்தப் படம் சுணங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அரங்கு நிறைந்த காட்சிகள்: இரண்டாவது வாரயிறுதியிலும படம் ஏறக்குறைய அதிகமான திரையரங்குகள்ல அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடியது. போட்டிக்கு சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் வெளியாகாததும் இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தில் விஜய் -த்ரிஷா ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. அவர்களுக்கு அதிகமான காம்பினேஷன் காட்சிகள் இல்லாதபோதிலும் குறைவான காட்சிகளிலும் சிறப்பான கெமிஸ்ட்ரியை இந்த ஜோடி வெளிப்படுத்தியுள்ளது.

LCU கனெக்ஷன்: இந்தப் படத்தில் LCU குறித்த அதிகமான எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், படத்தில் இதுகுறித்த காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தன. நடிகர் கமல்ஹாசனின் வாய்சும் படத்தில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தில் LCU கனெக்ஷன் குறித்த மற்றொரு விஷயத்தையும் லோகேஷ் கனகராஜ் தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். முன்னதாக பகத் பாசில் விக்ரம் படத்தில் அமராக நடித்திருந்தார். தற்போது அமர் மற்றும் லியோ இருவரும் சத்யமங்கலம் அனாதை இல்லத்தில் வளர்ந்ததாக படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அடுத்தடுத்த படங்களில் LCU: இதனிடையே தன்னுடைய கைதி 2 உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் LCU நடிகர்கள் தொடர்ந்து இடம்பெறுவார்கள் என்றும் அவர் தனது பேட்டியில் சுட்டிக் காட்டியுள்ளார். அடுத்ததாக தலைவர் 171 படத்தை இயக்கவுள்ள லோகேஷ் கனகராஜ், கைதி 2, விக்ரம் 2, ரோலக்ஸ் என அடுத்தடுத்த படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்தப் படங்களில் LCU நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்று தற்போது அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X