Lokesh kanagaraj: அடுத்த இரண்டு வருடங்களுக்கு இதுமட்டும் தான்.. லோகேஷ் கனகராஜ் உறுதி!

சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது லியோ படம்.

இந்தப் படத்தில் பார்த்திபன், லியோ என இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடித்துள்ள நிலையில், படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது.ஆயினும் படம் கடந்த 4 நாட்களில் 405 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாரயிறுதி மற்றும் விடுமுறை கொண்டாட்டங்கள் வந்த நிலையில், படம் வசூல்மழை பொழிந்து வருகிறது.

Director Lokesh kanagaraj assures that the next 2 years he have no new commitment except Thalaivar171 & Kaithi2

விஜய்யின் லியோ படம்: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படம் கடந்த 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது. இந்தப் படத்தில் பார்த்திபன், லியோ என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார். சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் கடந்த 4 நாட்களில் இந்தப் படத்தின் வசூல் 405 கோடியாக உள்ளது. இந்த வசூல் இனிவரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடிவாளம் கட்டிய நிலை: இந்தப் படத்தின் சூட்டிங்கை கடந்த பிப்ரவரி மாதத்தில் லோகேஷ் கனகராஜ் துவங்கினார். முன்னதாக டைட்டிலை சிறப்பான டீசருடன் அறிவித்திருந்தார். மேலும் ரிலீஸ் தேதியையும் அறிவித்துவிட்டு படத்தின் சூட்டிங்கை துவங்கினார். தொடர்ந்து காஷ்மீரில் 52 நாட்கள் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது. இதையடுத்து சென்னை, தலக்கோணம் பகுதிகளிலும் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது. படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு சூட்டிங்கை நடத்தியதால் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியிருந்ததாகவும் கடிவாளம் கட்டியதை போன்று உணர்ந்ததாகவும் லோகேஷ் முன்னதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அடுத்த ஆண்டில் துவங்கும் தலைவர் 171: இந்நிலையில், அடுத்தடுத்த படங்களை ரிலாக்சாக இயக்கவுள்ளதாகவும் தனது பேட்டியில் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் தலைவர் 171 படம் ரஜினிகாந்த் லீட் கேரக்டரில் நடிக்க அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் சூட்டிங் துவங்கவுள்ளது. இந்த சூட்டிங்கை மற்ற படங்களை போல சிறப்பான துவக்கத்துடன் லோகேஷ் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 ஆண்டுகளுக்கு என்கேஜ்: இதனிடையே தலைவர் 171 படத்தை முடிக்க தனக்கு ஒரு வருட காலம் தேவைப்படுவதாகவும் அடுத்ததாக துவங்கவுள்ள கார்த்தியின் கைதி 2 படத்தை முடிக்கவும் ஒரு வருட காலம் தேவைப்படுவதாகவும் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இதனால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு எந்த புதிய படங்களிலும் தான் கமிட்டாக மாட்டேன் என்றும் லோகேஷ் கனகராஜ் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

10 படங்கள் மட்டுமே: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மொத்தமாகவே 10 படங்களை மட்டுமே இயக்குவேன் என்று முன்னதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். சமீபத்திய பேட்டிகளில் இதை மீண்டும் உறுதி செய்துள்ளார். இதுவரை மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ என 5 படங்களை இயக்கி முடித்துள்ளார். அடுத்ததாக தலைவர்171 மற்றும் கைதி 2 என அடுத்தடுத்து இரு படங்களை இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து சூர்யாவின் ரோலக்ஸ், இரும்புக்கை மாயாவி மற்றும் விக்ரம் 2 படங்களை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X