Lokesh Kanagaraj: நயன்தாராவால் ரூட்டை மாற்றிய லோகேஷ் கனகராஜ்.. என்ன இப்படி ஆயிடுச்சு!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் லியோ படம் இன்னும் சில தினங்களில் திரையங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்தப் படத்தை தொடர்ந்து தலைவர்171 படத்தில் லோகேஷ் இணையவுள்ளார். படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Director Lokesh kanagaraj changed his decision about his production movies

நயன்தாரா விலகலால் தயாரிப்பு திட்டத்தை மாற்றிய லோகேஷ் கனகராஜ்: நடிகர் விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. லண்டனில் இந்தப் படத்தின் டிக்கெட் புக்கிங் 6 வாரங்களுக்கு முன்னதாகவே துவங்கப்பட்ட நிலையில், 44,000 டிக்கெட்டுகளை தாண்டி விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது.

இந்தப் படத்தில் கேங்ஸ்டராக நடிகர் விஜய் நடித்துள்ள நிலையில், படம் பாட்ஷாவின் கதையை தழுவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் படத்தின் ரிலீசை தொடர்ந்தே இது உறுதிப்படும். படத்தின் ப்ரமோஷன்கள் மிகச்சிறப்பான வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் உள்ளிட்டவர்கள் படம் குறித்த சுவாரஸ்யங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இன்றைய தினம் படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அனிருத் இசையில் இந்தப் படத்தின் இரு பாடல்கள் முன்னதாக வெளியாகி யூடியூபில் ட்ரெண்டிங்கில் இருந்த நிலையில், மூன்றாவது பாடல் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. இந்தப் பாடல் குடும்ப பாடலாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே படத்தில் I am scared என்ற ஆங்கில பாடல் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் தலைவர்171 படத்தில் லோகேஷ் கனகராஜ் இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதாக லோகேஷ் தெரிவித்துள்ளார். இதனிடையே லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் தமிழ் மற்றும் இந்தியில் அடுத்தடுத்த படங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. தமிழில் ராகவா லாரன்ஸ் மற்றும் நயன்தாரா லீட் கேரக்டர்களில் நடிக்கவிருந்த ஹாரர் படத்தை லோகேஷ் தன்னுடைய உதவி இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்தப் படத்திலிருந்து தற்போது நயன்தாரா விலகியுள்ள நிலையில், இந்தப் படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் ரத்னகுமார் இந்தப் படத்திலிருந்து வெளியேறியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக லோகேஷின் மற்றொரு உதவி இயக்குநர் இந்தப் படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே லோகேஷ் தயாரிப்பில் ரத்னகுமார், அதிரடி ஆக்ஷன் படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த இரு படங்களின் நடிகர், நடிகைகள் குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹாரர் படத்திலிருந்து நயன்தாரா விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக யார் நடிப்பார் என்பது குறித்தும் விரைவில் லோகேஷ் முடிவெடுக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிப்பது உறுதியாகியுள்ளது. இதனிடையே, லோகேஷ் தயாரிப்பில் உருவாகவுள்ள பாலிவுட் படம் குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X