Director Lokesh kanagaraj: மாநகரம் டூ தலைவர் 171.. சினிமாவில் 7 ஆண்டுகளை கடந்த லோகேஷ் கனகராஜ்!

சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய முதல் படத்திலேயே திரைத்துறையினரை மட்டுமில்லாமல் ரசிகர்களையும் தன் பக்கம் கவர்ந்திழுத்தார். அதிகமான நடிகர் நடிகைகளை இந்த படத்தில் பயன்படுத்தி சிறப்பான கதைக்களத்துடன் படத்தை வெற்றிப் படமாக்கினார். சினிமாவில் வழக்கத்தில் உள்ள ஒரு விஷயம் என்றால் முன்னணி இயக்குனருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன் மூலம் கிடைக்கும் அனுபவத்தை கொண்டு படம் இயக்குவது தான். ஆனால் முன்னதாக சில குறும்படங்களை மட்டும் இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் அதன் அனுபவத்தை மட்டுமே கையில் கொண்டு மாநகரம் படத்தை சிறப்பான வகையில் கொடுத்திருந்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றி படங்கள் மூலம் மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் தலைவர் 171 படத்தையும் இயக்க கமிட் ஆகியுள்ளார். இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் இணையவுள்ளார்.

Director Lokesh kanagaraj completes 7 years in Cinema and wishes pours


இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டில் மார்ச் 10ஆம் தேதி வெளியான படம் மாநகரம்/ தன்னுடைய முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களையும் விமர்சகர்ங்களையும் தன் பக்கம் கவர்ந்து இழுத்தார் லோகேஷ் கனகராஜ்/ அடுத்த படத்திலேயே கார்த்தியை இயக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. நாயகி இல்லாமல் ஒரு இரவில் நடக்கும் கதைக்களத்தில் கைதி படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் கார்த்தி கைதியாக கரடு முரடான தோற்றத்தில் நடித்திருந்தார். மாநகரம் மற்றும் கைதி படங்களை தொடர்ந்து அடுத்ததாக விஜயை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்தது.

விஜய்யுடன் கூட்டணி: இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மாஸ்டர் படத்தை விஜய் ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து சிறப்பாக கொடுத்து இருந்தார் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் கைகோர்த்த லோகேஷ் கனகராஜிற்கு அடுத்ததாக கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. கமலின் தீவிர ரசிகராக இருந்த லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தை இண்டஸ்ட்ரியல் ஹிட்டாக்கினார். தொடர்ந்து கடந்த ஆண்டில் விஜய் நடிப்பில் லியோ படத்தையும் இயக்கியிருந்தார். அடுத்தடுத்து இந்த படங்களின் வெற்றியால் தற்போது ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷிற்கு கிடைத்துள்ளது.

தலைவர் 171 படம்: தற்கான ஸ்கிரிப்ட் வொர்க்கை தற்போது மேற்கொண்டு வருகிறார் லோகேஷ். படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் திரைத்துறையில் தன்னுடைய ஏழு ஆண்டுகளை தற்போது லோகேஷ் பூர்த்தி செய்துள்ளார். இதையொட்டி அவருக்கு ஏராளமான ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் அவரது படங்கள் குறித்த அப்டேட்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் உதவி இயக்குனராகவும் பணியாற்றாமல் முன்னதாக சில குறும்படங்களை மட்டுமே இயக்கி அவை கொடுத்த அனுபவத்தை மட்டுமே கொண்டு மாநகரம் என்ற சிறப்பான படத்தை கொடுத்திருந்தார் லோகேஷ்.

7 ஆண்டு வெற்றிப்பயணம்: இவரது வளர்ச்சி குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவில் அமைந்துள்ளது. ஆனால் தான் மொத்தமாகவே பத்து படங்களை மட்டுமே இயக்குவேன் என்று லோகேஷ் தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. அடுத்ததாக சூர்யாவின் ரோலக்ஸ் படம் மற்றும் இரும்புக்கை மாயாவி, கார்த்தியுடன் கைதி 2 உள்ளிட்ட படங்களை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இவரது படங்களின் சிறப்பாக LCU பார்க்கப்படுகிறது/ ஒவ்வொரு படத்திலும் இந்த எல்சியூ-வை அவர் எப்படி பயன்படுத்துகிறார் என்று அறிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தயாரிப்பிலும் கவனம்: அந்த வகையில் அடுத்ததாக தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தில் அவர் LCUவை எப்படி பயன்படுத்துவார் என்பதை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். தற்போது இயக்கத்துடன் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். கடந்த ஆண்டு அவரது தயாரிப்பில் ஃபைட் கிளப் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X