‘கைதி 2’ கன்ஃபார்ம்.. லோகேஷ் கனகராஜ் க்ரீன் சிக்னல்!

கார்த்தியின் கைதி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்ற ரீதியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார்.

Recommended Video

Kaithi Public opinion:Vera Level கைதி படம்

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான கைதி திரைப்படம் திட்டமிட்டபடி நேற்று வெளியானது.

கைதி படத்தை பார்த்த அனைவரும் அந்த படத்தை பாராட்டி வருகிறார்கள். விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கைதி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்வீட் மூலம் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

நம்பிக்கை

நம்பிக்கை

கைதி படத்தின் மீதிருந்த நம்பிக்கை காரணமாக தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கைதி திரைப்படத்தை விஜய்யின் பிகில் திரைப்படத்திற்கு போட்டியாக இறக்கினர். எதிர்பார்த்தபடியே அவர்களது நம்பிக்கை வீண் போகவில்லை, கைதி படத்திற்கு தமிழக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சின்சியாரிட்டி

சின்சியாரிட்டி

பெரிய நடிகர்கள், மிகப்பெரிய பட்ஜெட் என்றுமே எதிர்பார்க்காமல், மாநகரம் படத்தை தனது திறமையை நம்பி சின்சியராக எடுத்த லோகேஷ் கனகராஜுக்கு, கைதி படமெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தையும் சின்சியராக எடுத்துள்ளார். அடுத்ததாக தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார். கைதி படத்தின் வெற்றி, தளபதி 64 படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள்

பிகில் திரைப்படத்தை பார்க்கும் விஜய் ரசிகர்கள், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கார்த்தியின் கைதி படத்தையும் திரையரங்குகளில் பார்க்கத் துவங்கியுள்ளனர். தளபதி 64 படத்தை லோகேஷ் இயக்கி வருவதால், அந்த இயக்குநருக்கும் தங்களது ஆதரவு இருக்கும் என நிரூபித்து வருகின்றனர்.

டில்லி

டில்லி

பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், தீரன் அதிகாரம் ஒன்று படங்களுக்கு பிறகு கைதி படத்தில் டில்லி கதாபாத்திரமாகவே கார்த்தி வாழ்த்திருக்கிறார். மகளை பார்க்க ஏங்கும் அப்பாவாக இருந்தாலும் சரி, இறங்கி சண்டை செய்து எதிரிகளை துவம்சம் செய்யும் ஆயுள் கைதி டில்லியாக இருந்தாலும் சரி, பிரியாணி அண்டா மூடியில் பிரியாணி கொட்டித் தின்னும் நக்கல் ஆக்டிங் என கார்த்தி நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.

கைதி 2

கைதி 2

ஒரே நாள் இரவிலே கைதி படம் முடிந்து விடுவதால், டில்லியை மேலும் திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். கைதி 2 வருமா என ரசிகர்கள் பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு தற்போது லோகேஷ் கனகராஜ் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

அந்த ட்வீட்

கைதி திரைப்படம் நேற்று வெளியான நிலையில், தற்போது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் பிரபு மற்றும் கார்த்திக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், உங்களுடைய கேள்விகளுக்கு விடையளிக்கிறேன், ஆமாம், டில்லி மறுபடியும் வருவான் எனக் கூறியுள்ளார். இதன்மூலம், தளபதி 64 படத்தை தொடர்ந்து மீண்டும் கார்த்தியுடன் கைதி 2 படத்தை லோகேஷ் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X