கொரோனாவில் இருந்து மீண்டு ஓட்டுப் போட்ட மாஸ்டர் இயக்குநர்.. பின்னாடி யாரு படம் ஓடுது தெரியுமா?

சென்னை: மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்.

கொரோனாவில் இருந்து மீண்டு விட்டேன் என்று வாக்களித்த கையோடு அவர் பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

மேலும், லோகேஷ் கனகராஜின் புகைப்படத்திற்கு பின்னால் இருக்கும் டிவியில் ஓடும் படமும் விவாத பொருளாகி உள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

மாஸ்டர் படத்தை முடித்த கையோடு உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கும் வேலைகளை தொடங்கினார் லோகேஷ் கனகராஜ். படப்பிடிப்பு தொடங்குவது தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வந்த லோகேஷ் கனகராஜுக்கு திடீரென கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டது. உடனடியாக தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

சரியான கொரோனா

சரியான கொரோனா

இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா பாதிப்பு சரியாகி விட்டது என்றும், தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்வீட் போட்டு நன்றி தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா சரியானதை அறிந்த ரசிகர்கள் சந்தோஷமாக வாழ்த்தி வருகின்றனர்.

ஓட்டும் போட்டுட்டேன்

ஓட்டும் போட்டுட்டேன்

மேலும், விரலில் வைக்கப்பட்ட மையை காட்டியபடி செல்ஃபி போஸ் கொடுத்து இன்று தனது ஜனநாயக கடமையையும் ஆற்றிவிட்டேன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜின் செல்ஃபியை ஜூம் செய்து பார்த்த ரசிகர் இன்னொரு விஷயத்தையும் வைரலாக விவாதித்து வருகின்றனர்.

கமல் படம்

கமல் படம்

லோகேஷ் கனகராஜ் தனது வீட்டில் இருந்து கொண்டு எடுத்த செல்ஃபி போட்டோவை ஷேர் செய்துள்ளார். அவருக்கு பின்னால், டிவியில் நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் படம் ஓடுகிறது. அதனை ஜூம் செய்து ஏகப்பட்ட கமல் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தேர்தலுக்கு பிறகு

தேர்தலுக்கு பிறகு

தேர்தல் களத்தில் அனல் பறக்க தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்த கமல்ஹாசன், தேர்தலுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலுக்கு சினிமா தடையாக இருந்தால், சினிமாவில் இருந்து விலகவும் தயார் என கமல் சமீபத்தில் பரபரப்பான அறிக்கை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

குறியீடு ஸ்பாட்டட்

குறியீடு ஸ்பாட்டட்

ஆடை படத்தின் இயக்குநரும் மாஸ்டர் படத்தின் வசனகர்த்தாவுமான இயக்குநர் லோகேஷ் கனகராஜ், வெல்கம் ஹோம் என ட்வீட் போட்டு, குறியீடு ஸ்பாட்டட் என கமலுக்குத் தான் லோகேஷ் ஓட்டுப் போட்டுள்ளார் என்பதை கிண்டலாக ட்வீட் போட்டு வெறுப்பேற்றி உள்ளார்.

Recommended Video

Tamil Cinema Celebrities Vote | TN Election 2021 | Oneindia Tamil
டேய் சும்மா இருடா

டேய் சும்மா இருடா

அந்த ட்வீட்டை பார்த்து பதறிப்போன லோகேஷ் கனகராஜ், டேய் சும்மா இருடா என கமெண்ட் அடிக்க, நடிகர் சாந்தனுவும் ஹாஹா தெரிஞ்சுடுஞ்சு என ட்விட்டரில் விளையாட அடேய் என அவருக்கும் ரிப்ளை கொடுத்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X