என்ன கைமாறு செய்யப்போகிறேன்.. ஐ லவ் யூ ஆல்.. நெகிழ்ந்த லோகேஷ் கனகராஜ்!

சென்னை : விக்ரம் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

விக்ரம் படத்தில், ஃபஹத் ஃபாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் கமல்ஹாசனுக்கு சமமான முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விக்ரம் படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலிருந்தே, மிகப்பெரிய வசூலை குவித்து வருகிறது. கேரளா, கர்நாடகா படத்தில் திரையரங்கம் முன்பு பட்டாசு வெடித்து படத்தை கொண்டாடி வருகின்றனர்.

விக்ரம்

விக்ரம்

கைதி, மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய்சேதுபதி, நரேன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜூன் 3ந் தேதி வெளியான இத்திரைப்படம் வசூலை வாரிக்குவித்து அனைத்து தரப்பு மக்களின் பாராட்டை பெற்று வருகிறது.

அதிரடியான படம்

அதிரடியான படம்

இப்படத்தில் அமர் கதாபாத்திரத்தில் பகத் பாசிலும், கேங்க்ஸ்டர் சந்தானம் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், கர்ணன் கதாபாத்திரத்தில் கமல்ஹாசனும் நடித்துள்ளனர். போலீசாரிடம் பிடிபட்ட போதை பொருளை கைப்பற்ற துடிக்கும் கும்பலுக்கும், அதை தடுக்க போராடும் கும்பலுக்கும் இடையே நடக்கும் சண்டையை படம் தத்ரூபமாக காட்டியுள்ளது.

குவியும் பாராட்டு

குவியும் பாராட்டு

காட்சிக்கு காட்சி அதிரடி ட்விஸ்ட் என ஒவ்வொரு சீனிலும் படத்தின் பரபரப்பு குறையாமல் இருந்தது. கைதி படத்திற்கும் விக்ரம் படத்திற்கும் தொடர்புப்படுத்திய விதம், விஜய் சேதுபதியின் அசால்டான நடிப்பு அனைவரையும் பிரம்மிக்க வைத்தது. கமல்ஹாசன் ஓய்வு பெற்ற காவலராக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் வந்து மிரட்டி உள்ளார் என விக்ரம் படத்தை அனைவரும் பாராட்டி உள்ளனர்

சிறப்பு வேடத்தில்

சிறப்பு வேடத்தில்

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் இந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டதில்லை, விக்ரமுக்கும் எனக்கும் நீங்கள் கொடுத்த வரவேற்பு என்னை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்திருக்கிறது. நீங்கள் தந்த அன்பிற்கு கைமாறாக நான் என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. இதை எனக்கு ஏற்படுத்திக்கொடுத்த கமல்ஹாசன் சாருக்கும், என்னுடைய மக்களுக்கும் என்றும் நான் நன்றியுடையவனாக இருப்பேன். நான் நெகிழ்ந்து விட்டேன். லவ் யூ ஆல் என்று பதிவிட்டு இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X