Lokesh: ட்விட்டர்ல லியோ படத்தை சேர்க்காததற்கு காரணம்.. வதந்திகளுக்கு லோகேஷ் மீண்டும் முற்றுப்புள்ளி!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தின்மூலம் அவருடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். முன்னதாக இவர்களது கூட்டணியில் மாஸ்டர் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

லியோ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ள நிலையில், படம் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தின் ப்ரமோஷன்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி பேட்டிகளையும் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்து வருகிறார்.

Director Lokesh kanagaraj explains about the rumours of the movie Leo not included in his twitter

ட்விட்டர் பக்கத்தில் லியோ படத்தை இணைக்காததன் காரணத்தை விளக்கிய லோகேஷ்: நடிகர் விஜய்யின் லியோ படம் இன்னும் சில தினங்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின்மூலம் மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணைந்துள்ளார் விஜய். இந்தப் படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடித்துள்ளார். பார்த்திபன், லியோ என இருவேறு கெட்டப்புகளில் அவர் நடித்துள்ள நிலையில், படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன்களை படக்குழுவினர் மிகச்சிறப்பாக எடுத்து சென்று வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில், தொடர்ந்து படத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள், போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோக்கள், பாடல்கள், ட்ரெயிலர் என அடுத்தடுத்து வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

இந்தப் படம் LCUவில் இடம்பெறாது மாறாக லியோதாஸ் யூனிவர்சில் படம் அமையும் என்று தனது பேட்டியொன்றில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். படத்தின் ப்ரமோஷனையொட்டி அவர் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார். அவரது பேட்டிகளில் பல சுவாரஸ்யங்களை பார்க்க முடிகிறது. அடுத்தடுத்த அப்டேட்கள் குறித்தும் லோகேஷ் பேசியுள்ளார். படத்தின் இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில், நாளைய தினம் மற்றொரு பாடல் வெளியாகவுள்ளதாகவும் அவர் அப்டேட் தெரிவித்துள்ளார்.

தனக்கு இந்தப்படத்தில் பிடித்தமான I am scared என்ற ஆங்கில பாடல் குறித்தும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இதுதவிர்த்து பேமிலி பாடலாக மற்றொரு பாடலும் படத்தில் சிறப்பாக அமைந்துள்ளதை சுட்டிக் காட்டிய லோகேஷ் கனகராஜ், தான் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் தீவிரமாக உள்ளதால், நாளைய தினம் எந்தப் பாடல் வெளியாகும் என்பது குறித்து தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். அனிருத்தின் இசையில் அவர் அதிகமாக தலையிடுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக லோகேஷ் கனகராஜ் ட்விட்டர் பக்கத்தில் மாநகரம் முதல் விக்ரம் வரை படங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் லியோ படம் இடம்பெறாதது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியிருந்தது. அதையொட்டி விஜய்க்கும் லோகேஷிற்கும் பிரச்சினைகள் இருப்பதாகவும், லோகேஷ் படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் பல்வேறு வதந்திகள் பரவிவந்தன. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு லியோ படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இணைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார் லோகேஷ்.

இந்நிலையில் தற்போதைய பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ள லோகேஷ், தன்னுடைய படங்களின் சென்சார் நிறைவடைந்த பின்பே அந்தப் படத்தின் பெயரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இணைக்கும் வழக்கத்தை தான் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அதையொட்டியே தற்போது லியோ படத்தின் சென்சார் நிறைவடைந்ததையொட்டி படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளதாகவும் அவர் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X