Lokesh Kanagaraj: ரொம்ப சந்தோஷமா இருக்கு.. தலைவர் 171 படம் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய லோகேஷ்
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படம் சர்வதேச அளவில் வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்நிலையில் இன்றைய தினம் இந்தப் படம் குறித்து சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜெயிலர் படத்தின் மாஸ் ஹிட்டை தொடர்ந்து ரஜினியின் தலைவர்171 படத்தையும் தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ்.
தலைவர் 171 படம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த லோகேஷ் கனகராஜ்: நடிகர் விஜய்யின் லியோ படம் சர்வதேச அளவில் வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தின் சூட்டிங் காஷ்மீரில் 52 நாட்கள் கடுமையான குளிர், நிலநடுக்கம் இவற்றிற்கிடையில் நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக சென்னை, தலக்கோணம் போன்ற இடங்களிலும் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தின் முதல் பாகத்தை சமீபத்தில் பார்த்துள்ள தயாரிப்பாளர் லலித்குமார், மிகச்சிறப்பாக படம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் எடிட்டர் பிலோமின் ராஜிற்கும் அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் கேள்வி எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு தமிழ்நாட்டில்தான் நடக்கவுள்ளதாகவும் இடம் இன்னும் முடிவாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லியோ படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்தின் 171வது படத்தில் இணையவுள்ளதாக முன்னதாக தகவல்ள் வெளியாகின. இந்நிலையில் இந்தப் படம் குறித்து தற்போது தயாரிப்பு தரப்பான சன் பிக்சர்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜெயிலர் படத்தின் அதிரடி வெற்றியை தொடர்ந்து ரஜினியின் தலைவர் 171 படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. தற்போது படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை எழுதி இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவ் இணைந்துள்ளனர். இந்நிலையில் ரஜினிகாந்துடன் தலைவர்171 படத்தில் இணைந்துள்ளது குறித்து லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்தது குறித்தும் சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். கமல், விஜய் என அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களை இயக்கியுள்ள லோகேஷ், சூப்பர்ஸ்டாருடன் இணைந்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ஷன் த்ரில்லராக உருவாகவுள்ள இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை லோகேஷ் முடித்துள்ளதாகவும் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரம்மாண்டமான அளவில் பான் இந்தியா படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் இந்திய அளவில் முக்கியமான 15 முதல் 20 நடிகர்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயிலர் படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினியின் தலைவர் 171 படத்திலும் அனிருத் இசையமைக்கவுள்ளார். ஜெயிலர் படத்தின் பாடல்கள் மாஸ் ஹிட்டடித்த நிலையில், இந்தப் படத்தின் இசை மேலும் அடுத்த லெவலுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











