Lokesh Kanagaraj: கடைசியா எப்ப 8 மணிநேரம் தூங்குனீங்க.. லோகேஷ் என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: நடிகர்கள் விஜய், த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படம் நாளை மறுநாள் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்திற்கான பல பிரமோஷன்களை படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர். இயக்குநர் லோகேஷ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டவர்களும் படத்தின் ப்ரமோஷன்களில் ஈடுபட்டுள்ளனர்.

பல சேனல்களுக்கும் யூடியூப் பக்கங்களுக்கும் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்துவரும் லோகேஷ் கனகராஜ், லியோ படம் குறித்தும் தன்னுடைய அடுத்தடுத்த ப்ராஜெக்ட்கள் குறித்தும் பேசி வருகிறார்.
தன்னுடைய தூக்கம் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்: நடிகர் விஜய், த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், அனுராக் காஷ்யப், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள லியோ படம் நாளை மறுநாள் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் டிக்கெட் விற்பனை சிறப்பாக அமைந்துள்ளது. புக்கிங்குகள் துவங்கப்பட்ட அனைத்து இடங்களிலும் புக் செய்ய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
6 வாரங்களுக்கு முன்னதாகவே லண்டன் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் புக்கிங்குகள் துவங்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் புக்கிங்குகளை மேற்கொண்டனர். இதேபோல அமெரிக்கா, ஆப்ரிக்கா உள்ளிட்ட இடங்களிலும் டிக்கெட் புக்கிங் செய்ய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். இதனிடையே நேற்றைய தினம் திடீரென நள்ளிரவில் பிவிஆர், ஐநாக்ஸ் போன்ற மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் லியோ படத்தின் புக்கிங்குகள் துவங்கப்பட்ட நிலையில், சில மணிநேரங்களிலேயே முதல் நாளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
விஜய் இந்தப் படத்தில் லியோ மற்றும் பார்த்திபன் என இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது. படத்தின் எதிர்பார்ப்பிற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் முக்கியமான காரணமாக அமைந்துள்ளார். முன்னதாக விஜய் -லோகேஷ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்தின் வெற்றியும் இந்த எதிர்பார்ப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது. இதேபோல லோகேஷின் முந்தைய படமான விக்ரம் படத்தின் இன்டஸ்ட்ரியல் ஹிட்டும் லியோ படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் கடந்த சில தினங்களில் தொடர்ந்து பல்வேறு சேனல்களுக்கும் யூடியூப் பக்கங்களுக்கும் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்துவந்தார் லோகேஷ் கனகராஜ். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் ஜரூராக நடந்துவந்த நிலையில், அடுத்தடுத்த பேட்டிகளுக்கும் அவர் நேரம் ஒதுக்கினார். இந்த பேட்டிகள் படத்தின் ப்ரமோஷனுக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளன.
இதனிடையே லோகேஷின் பேட்டியொன்றில் அவர் சமீபத்தில் எப்போது 8 மணிநேரம் தூங்கினார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், லியோ படத்தின் சென்சார் நிறைவடைந்தவுடன்தான் தான் 8 மணிநேரம் நிம்மதியாக தூங்கியதாக தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் லியோ படத்தின் சூட்டிங் அறிவிப்புடன் துவங்கியது. முன்னதாகவே படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்ட நிலையில் மிகப்பெரிய அழுத்தத்துடன் வேலை செய்ததாக சமீபத்தில் லோகேஷ் தெரிவித்திருந்தார்.
முன்னதாகவே ரிலீஸ் தேதியை அறிவிப்பதால் மிகப்பெரிய அழுத்தம் ஏற்படுவதாகவும் இதுபோன்ற செயலை தனது அடுத்தப்படமான ரஜினிகாந்தின் தலைவர்171 படத்தில் செய்யப் போவதில்லை என்றும் லோகேஷ் கூறியுள்ளார். தலைவர் 171 படத்தை ரிலாக்சாக சிறப்பான வகையில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் கதையை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், தன்னை கட்டிப் பிடித்து பாராட்டியதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











