Don't Miss!
- Technology
சர்ப்ரைஸ்.. பிப்.7 அன்று OnePlus 11 உடன் சேர்ந்து "ரகசியமாக" அறிமுகமாகும் இன்னொரு போன்!
- News
சபாஷ்.. மதவாத சக்திகளை வீழ்த்த கமல்ஹாசன் ஆதரவு.. காங்கிரஸ் பாராட்டு மழை
- Sports
கோலி தந்த ஐடியா தான் அது.. நியூசி,யின் மிடில் ஆர்டரை சுருட்டியது எப்படி?.. ஷர்துல் சுவாரஸ்ய பதில்!
- Lifestyle
கும்பத்தில் சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
- Automobiles
ஆட்டோ மாதிரி ஓடும், ஸ்டாண்ட் போடவே தேவை இல்ல... செல்ஃப்-பேலன்ஸிங் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - பெய்கோ எக்ஸ்4!!
- Finance
ஜன.26 அல்வா நிகழ்ச்சி.. பட்ஜெட் பணிகள் ஓவர்.. 1ஆம் தேதி ரெடி..!
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
தளபதி 67 அடுத்தடுத்த அப்டேட்ஸ்.. லோகேஷ் கனகராஜ் கொடுத்த ஹிண்ட்!
கோவை : நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தின் சூட்டிங் தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. இதில் சாண்டி மாஸ்டர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே வாரிசு படத்தின் கொண்டாட்டங்களில் நடிகர் விஜய் படக்குழுவினருடன் கலந்துக் கொண்டு வருகிறார்.
வாரிசு படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி 11 நாட்களில் 250 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தயாரிப்பு தரப்பு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
மாஸ் நடிகரின் அடுத்த அப்டேட் தாமதமாக அந்த விஷயம் தான் காரணமா? தீயாக பரவும் தகவல்!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்யின் வாரிசு படம் கடந்த 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடி வருகிறது. பேமிலி சென்டிமெண்ட்டை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் விஜய் படங்களுக்கேயுரிய ஆக்ஷன், காமெடியும் தூக்கலாக காணப்பட்டது.

வாரிசு படம்
இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான வாரிசு படம் பொங்கல் விடுமுறையில் அதிகமான ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைத்தது. இந்நிலையில் நாளைய தினம் குடியரசு தினத்தையொட்டி 3 நாட்கள் விடுமுறை தினங்களாக உள்ள நிலையில், குடும்பத்தோடு இந்தப் படத்தை அதிகமான ரசிகர்கள் பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நட்சத்திர பட்டாளம்
நடிகர் விஜய்யுடன், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஷாம் என நட்சத்திரப் பட்டாளங்களை சரியாக கையாண்டு இந்தப் படத்தை சிறப்பாக கொடுத்துள்ளார் பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி. ரசிகர்கள் இந்தப் படத்தை குடும்பத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

தளபதி 67 படம்
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 67 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தின் டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்ட நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. இந்த சூட்டிங்கில் விஜய் பங்கேற்காத நிலையில், நடிகர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

காஷ்மீரில் அடுத்தக்கட்ட சூட்டிங்
இந்த சூட்டிங்கை தொடர்ந்து அடுத்ததாக படக்குழு காஷ்மீருக்கு அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக பயணப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சூட்டிங்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அங்கு அதிக நாட்கள் சூட்டிங் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த அப்டேட்கள்
இந்நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை விரைவில் வெளியிடவுள்ளதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். இதனிடையே, கோவையில் கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்றுள்ள லோகேஷ், தளபதி 67 குறித்த மாணவர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல் ஹிண்ட் கொடுத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் ஹிண்ட்
அதன்படி பிப்ரவரி 1, 2 மற்றும் 3 என்று அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து பிப்ரவரி 1ம் தேதி படம் குறித்த அறிவிப்பும், 2ம் தேதி படத்தின் பூஜையின் படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகும் எனவும் பிப்ரவரி 3ம் தேதி படத்தின் அறிவிப்பு டீசர் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.