வாரிசுக்கு அப்புறம்தான் மத்ததெல்லாம்.. என்ன லோகேஷ் இப்படி சொல்லிட்டாரு!

சென்னை : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படம் உள்பட 4 படங்களை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

அடுத்ததாக தளபதி 67 படத்தை இவர் இயக்கவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.

கடந்த விஜய் பிறந்தநாளின் போது இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று முன்னதாக கூறப்பட்டது. ஆனால் படம் குறித்த அறிவிப்பு வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

சிறப்பான பயணம்

சிறப்பான பயணம்

மாநகரம் படத்தில் ஆரம்பித்த தனது சிறப்பான பயணத்தை தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் என மேலும் சிறப்பாக்கிக் கொண்டார் லோகேஷ் கனகராஜ். வங்கியில் பணியாற்றிய ஒருவர் எந்தவிதமான பயிற்சியும் இல்லாமல் இதுபோன்ற தீவிரமான படங்களை கொடுக்க முடியுமா என்ற வியப்பையும் அனைவரிடமும் ஏற்படுத்தி வருகிறார்.

விக்ரம் படத்தின் தாக்கம்

விக்ரம் படத்தின் தாக்கம்

அவரது அனைத்து படங்களும் சிறப்பான படங்களாகவே உள்ள நிலையில், அடுத்தடுத்த வெற்றிகளை குவித்து வருகிறார். ஆனால் அவரை சர்வதேச அளவில் கொண்டு சேர்த்துள்ளது விக்ரம் படம். இந்தப் படம் ரசிகர்களிடையே ஏற்படுத்திவரும் தாக்கம், அதன் வசூல் மூலம் பிரதிபலித்து வருகிறது.

22வது நாளில் விக்ரம் படம்

22வது நாளில் விக்ரம் படம்

தொடர்ந்து இன்றைய தினம் 22வது நாளை திரையரங்குகளில் வெற்றிகரமாக துவங்கியுள்ளது விக்ரம் படம். படத்தின் காட்சி அமைப்புகள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. தற்போது இந்தப் படத்தின் வசூல் 400 கோடி ரூபாய்களை நெருங்கியுள்ள நிலையில் இந்த வாரயிறுதியிலும் மேலும் படம் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தளபதி 67 படம்

தளபதி 67 படம்

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 67 படத்தில் லோகேஷ் இணையவுள்ளது உறுதியாகியுள்ளது. ஆயினும் படக்குழுவினர் இந்த அறிவிப்பை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கடந்த விஜய் பிறந்தநாளில் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாரிசு படத்தின் அறிவிப்பு மட்டுமே வெளியானது.

தீவிரமான ஆக்ஷன் படம்

தீவிரமான ஆக்ஷன் படம்

ஆயினும் தளபதி 67 படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்களை லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து பல இன்டர்வியூக்களில் தெரிவித்து வருகிறார். படம் தீவிரமான ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் 40 வயது கேரக்டரில் கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தளபதி 67 படம் குறித்த அறிவிப்பு

தளபதி 67 படம் குறித்த அறிவிப்பு

இந்தப் படம் குறித்த அறிவிப்பு கடந்த விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகாத நிலையில் தற்போது இதுகுறித்தும் லோகேஷ் அப்டேட் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் விஜய் தனது வாரிசு படத்தை முடித்த பின்பே தளபதி 67 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

லோகேஷை கவர்ந்த கில்லி படம்

லோகேஷை கவர்ந்த கில்லி படம்

மேலும் இந்தப் படம் குறித்த அறிவிப்பை தயாரிப்புத் தரப்பு வெளியிட்ட பின்பே படம் குறித்து வெளிப்படையாக பேச முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். கமலின் பழைய விக்ரம் கேரக்டரை போன்றே விஜய்க்கு spinoff படம் எடுத்தால் எந்த கேரக்டரை விரும்புவீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் விஜய்யின் கில்லி படத்தின் வேலு கேரக்டரை கைக்காட்டியுள்ளார்.

கில்லி 2 வெளியாகுமா?

கில்லி 2 வெளியாகுமா?

ஏற்கனவே கில்லி படத்தின் இரண்டாவது பாகத்தை ரசிகர்கள் விருப்பத்துடன் கேட்டு வரும் சூழலில், லோகேஷும் இந்தக் கேரக்டரை விரும்புவதாக தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் போன்ற படத்தை மீண்டும் விஜய்யிடம் முயற்சித்தால் மீண்டும் கில்லியை நாம் அனைவரும் பார்க்கமுடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X