twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கைதிக்கு காரணமாய் இருந்த விருமாண்டி.. கைமாறாக கமலை இயக்கப்போகும் லோகேஷ் கனகராஜ்!

    |

    சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அவரது இரண்டாவது படமான கைதி, கடந்த 25ஆம் தேதி வெளியானது. இந்தப் படமும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

    கார்த்தி நடிப்பில் பாடல்கள் இல்லாமல், ஹீரோயின் இல்லாமல் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டை பெற்று வருகிறது. கைதி படத்திற்கு மற்ற மொழிகளில் ரீமேக் செய்யவும் போட்டி நிலவி வருகிறது.

    அமலா பாலுக்கு மிஸ்ஸானது.. இப்போ மேகா ஆகாஷுக்கு கிடைச்சிருக்கு!அமலா பாலுக்கு மிஸ்ஸானது.. இப்போ மேகா ஆகாஷுக்கு கிடைச்சிருக்கு!

    படப்பிடிப்பு

    படப்பிடிப்பு

    கைதி படத்தை தொடர்ந்து விஜயின் 64வது படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதன் படப்பிடிப்புகள் டெல்லியில் நடைபெறுகிறது.

    ராஜ்கமல் பிலிம்ஸ்

    ராஜ்கமல் பிலிம்ஸ்

    இந்நிலையில் இந்த படம் முடிந்த கையோடு கமல்ஹாசனை இயக்கப்போகிறாராம் லோகேஷ் கனகராஜ். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளது.

    விருமாண்டியும் ஒரு காரணம்

    விருமாண்டியும் ஒரு காரணம்

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என ஏற்கனவே கூறியிருக்கிறார். கைதி படம் உருவாக விருமாண்டி படமும் ஒரு காரணம் என தெரிவித்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

    நடிகர்கள் விருப்பம்

    நடிகர்கள் விருப்பம்

    கைதி படம் வெற்றியை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களும் லோகேஷ் கனகராஜுக்கு வாய்ப்பு கோடுக்க விருப்பமுடன் இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் சூரியாவை வைத்தும் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Director Lokesh Kanagaraj going direct Kamal hassan. After Vijay's 64 Lokesh Kanagaraj will direct Kamal. Rajkamal films will produce the movie it seems.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X