Lokesh Kanagaraj: லியோ படத்தை தொடர்ந்து நடிக்கத் தயாராகும் லோகேஷ்.. யார்கூட தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய் -லோகேஷ் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியுள்ள லியோ படம் இன்னும் ஒரு மாதத்தில் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தின் ரிலீசுக்காக உலகளவில் ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களையும் அவர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
தயாரிப்புத் தரப்பும் தொடர்ந்து பல விஷயங்கள் குறித்த அப்டேட்களை கொடுத்து வருகிறது. இன்னும் சில தினங்களில் படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீசாகவுள்ளது.

லியோ படத்தை தொடர்ந்து நடிக்க தயாராகும் இயக்குநர் லோகேஷ்: நடிகர் விஜய், வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம் லியோ. மாஸ்டர் படத்தை தொடர்ந்து இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் உள்ளது. இந்தப் படம் லோகேஷின் LCUவில் இணையுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே மாஸாக காணப்படுகிறது. இதுகுறித்து எந்தவிதமான அறிவிப்பையும் மேற்கொள்ளாமல் உள்ளார் லோகேஷ் கனகராஜ்.
லியோ படத்தின் போஸ்டர்கள், பர்ஸ்ட் சிங்கிள், காஷ்மீர் ஷெட்யூல் வீடியோக்கள், கிளிம்ப்ஸ் வீடியோக்கள் போன்றவை வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து என்டர்டெயின் செய்து வந்துள்ளது. முதல் பாடல் நா ரெடி சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து யூடியூபிலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்தது. பிரபலங்களும் இந்தப் பாடலின் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் இன்னும் சில தினங்களில் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ளது.
இதுகுறித்து ஜவான் படத்தின் ரிலீசின்போதே, இசையமைப்பாளர் அனிருத் அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று மாலை இந்தப் பாடல் குறித்த அப்டேட் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் மொத்தமே இரு பாடல்கள்தான் உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த இரண்டாவது மற்றும் இறுதிப்பாடலுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது. இந்தப் பாடல் விஜய் மற்றும் த்ரிஷாவின் ரொமான்டிக் பாடலாக அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிசியாக உள்ளார் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தையும் துவங்கவுள்ளார். இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் தகவல் வெளியிட்டது. இந்நிலையில் இதற்கு இடைப்பட்ட காலத்தையும் விடாமல் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளார் லோகேஷ். விரைவில் அவர் தான் நடிகராக கமிட்டாகியுள்ள படத்தில் இணையவுள்ளார்.
ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் லோகேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளது குறித்து முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக இருவரும் தொடர்ந்து 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளனர். இந்தப் படத்தை தொடர்ந்து டைரக்ஷனை நிறுத்திவிட்டு நடிப்பில் லோகேஷ் கவனம் செலுத்துவாரா என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த ஒரு படம் மட்டுமே தன்னுடைய நடிப்பில் உருவாகும் என்று அவர் கூறியுள்ளார்.
அன்பறிவ் சொன்ன கதை பிடித்துப் போனதால் நடிக்க சம்மதித்ததாகவும் தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்திய அளவில் மோஸ்ட் வான்டட் இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார் லேலகேஷ். அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தவுள்ளது அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அவ்வப்போது படங்களில் தலைகாட்டி வரும் இசையமைப்பாளர் அனிருத்தும் அவருடன் இணைந்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை படத்திற்கு கொடுத்துள்ளது. ஸ்டண்ட் மாஸ்டர்கள் இயக்கவுள்ள இந்தப் படம் மிகப்பெரிய ஆக்ஷன் என்டர்டெயினராக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











