Lokesh Kanagaraj: தலைவர் 171 படத்தை தொடர்ந்து லோகேஷின் ப்ளான்.. தொடர்ந்து தள்ளிப்போகும் கைதி 2!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். தற்போது லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார்.

லியோ படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்ததாக ரஜினியின் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் கைதி 2 படத்தின் சூட்டிங் தள்ளிப்போகும் என்று தெரிகிறது.

Director Lokesh kanagaraj going to direct Suryas Rolex standalone movie after Thalaivar 171

தலைவர் 171 படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் இணைய லோகேஷ் திட்டம்: நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளது.

இந்தப் படத்தின் ரிலீசையொட்டி முன்னதாகவே படத்தின் ப்ரமோஷன்களை படக்குழுவினர் துவக்கியுள்ளனர். படத்தின் போஸ்டர்கள், ஃபர்ஸ்ட் சிங்கிள், சஞ்சய் தத், அர்ஜூன் ஆகியோரின் பிறந்தநாள் சிறப்பு கிளிம்ப்ஸ் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படத்தின் இசை வெளியீடு வரும் செப்டம்பர் மாதம் 3வது வாரத்தில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினியுடன் தலைவர் 171 படத்தில் இணையவுள்ளார் லோகேஷ் கனகராஜ். அக்டோபரில் லியோ படத்தின் ரிலீசை தொடர்ந்து இந்தப் படத்தின் வேலைகளில் லோகேஷ் இறங்கவுள்ளார். இதனிடையே, அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தின் சூட்டிங்கில் விரைவில் இணையவுள்ள ரஜினிகாந்த், அந்தப் படத்தை நிறைவு செய்துவிட்டு தலைவர் 171 படத்தில் லோகேஷுடன் சூட்டிங் செல்லவுள்ளார்.

இந்நிலையில் தலைவர் 171 படத்தை நிறைவு செய்துவிட்டு, அடுத்தாக சூர்யாவின் ரோலக்ஸ் படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்ரம் படத்தில் சில நிமிடங்களே வந்த ரோலக்ஸ் கேரக்டரில் சூர்யா மிரட்டியிருந்தார். சூர்யாவிடம் இருந்து அப்படி ஒரு கேரக்டரை ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத நிலையில், இந்தக் கேரக்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ரோலக்ஸ் கேரக்டரை மட்டுமே வைத்து தனியாக ஒரு படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைவர் 171 படத்தை தொடர்ந்து கார்த்தியின் கைதி 2 படத்தை லோகேஷ் இயக்குவார் என்று முன்னதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ரஜினி படத்தை தொடர்ந்து ரோலக்ஸ் படத்தை அவர் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் கார்த்தியின் கைதி 2 படத்தின் சூட்டிங் மேலும் தாமதமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X