தெலுங்கில் முன்னணி ஹீரோவுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்.. யார் அந்த ஹீரோ தெரியுமா?

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 4 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். ஆனால் அனைத்துமே மிகுந்த கவனம் பெற்றுள்ளன.

குறிப்பாக சமீபத்தில் வெளியான விக்ரம் படம் இவருக்கு மிகவும் சிறப்பாக கைக்கொடுத்துள்ளது.

இதையடுத்து சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

லோகேஷ் இயக்கிய படங்கள்

லோகேஷ் இயக்கிய படங்கள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இதுவரை 4 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் நேரடியாக வங்கி வேலையிலிருந்து சினிமாவிற்கு வந்து தன்னுடைய முழுமையான முயற்சியால் தற்போது சாதித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக அவருக்கு விக்ரம் படம் சிறப்பாக கைக்கொடுத்துள்ளது.

லோகேஷ் யூனிவர்ஸ்

லோகேஷ் யூனிவர்ஸ்

முன்னதாக மாநகரம், கைதி, மாஸ்டர் என மூன்று படங்களையும் வித்தியாசமாக கொடுத்திருந்த லோகேஷ், விக்ரம் படத்தில் லோகேஷ் யூனிவர்ஸ் என்ற முறையில் அந்தப் படங்களை இணைத்துள்ளது வித்தியாசமாக பார்க்கப்படுகிறது. தமிழில் சிறப்பான முயற்சியாகவும் உள்ளது.

தளபதி 67 படம்

தளபதி 67 படம்

அடுத்ததாக விஜய்யுடன் தளபதி 67 படத்தில் லோகேஷ் இணையவுள்ள நிலையில், அந்தப் படமும் இந்த யூனிவர்சில் இணையுமா என்பது குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விஜய் இந்தப் படத்தில் 40 வயது கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் லோகேஷ் தெரிவித்திருந்தார்.

ரசிகர்கள் வெயிட்டிங்

ரசிகர்கள் வெயிட்டிங்

இந்தப் படத்தின் அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அந்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங். ரசிகர்களின் நாடித் துடிப்பை எகிற வைக்கும் இந்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. லோகேஷ் -விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் சிறப்பாக அமைந்தது.

100 சதவிகிதம் லோகேஷ் படம்

100 சதவிகிதம் லோகேஷ் படம்

ஆனால் விஜய் பெரிய ஹீரோ என்பதால் அந்தப் படத்தில் சில சமரசங்களை செய்துக் கொண்டதாகவும் ஆனால் தற்போது இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளதால் தளபதி 67 படம் 100 சதவிகிதம் தன்னுடைய படமாகவே அமையும் என்றும் முன்னதாக பேட்டியொன்றில் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

ராம்சரணுடன் படம்

ராம்சரணுடன் படம்

அதனால் தளபதி 67 படம், விக்ரம் படம் போல சிறப்பாக ரசிகர்களை கவரும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, விரைவில் ராம்சரணுடன் இணைந்து தான் படமியக்க உள்ளதாக லோகேஷ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தப் படம் கண்டிப்பாக பிரம்மாண்டமான படமாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 பிரம்மாண்டமான படம்

பிரம்மாண்டமான படம்

ராம் சரண் மற்றும் லோகேஷ் இருவரும் 2 முதல் 3 படங்களில் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், அந்தப் படங்களை முடித்துக் கொண்டு, இருவரும் இணையவுள்ளதாகவும் லோகேஷ் தெரிவித்துள்ளார். கோலிவுட்டிலேயே மோஸ்ட் வான்டட் இயக்குநராக மாறியுள்ள லோகேஷ் கனகராஜ் மற்ற மொழி ஹீரோக்களுடன் இணைவது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X