Lokesh Kanagaraj: பாலிவுட் போகும் லோகேஷ் கனகராஜ்... அவரோட ஐடியா என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய் லீட் கேரக்டரில் நடித்துள்ள படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

வரும் 19ம் தேதி இந்தப்படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன்களையொட்டி லோகேஷ் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

Director Lokesh kanagaraj going to produce bollywood movie soon

லியோ படம் LCU வில் இணையுமா என்பது குறித்து தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு பதிலளித்த படத்தின் தயாரிப்பாளர், ரிலீஸ் வரை காத்திருக்குமாறு தெரிவித்துள்ளர்.

பாலிவுட்டில் படம் தயாரிக்கும் லோகேஷ் கனகராஜ்: நடிகர் விஜய், த்ரிஷா லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. தமிழகத்தில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் இந்தப் படத்தின் ஃபீவர் காணப்படுகிறது. அந்த வகையில் லியோ படத்தின் ரிலீசை திருவிழாவாக கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தற்போதே படத்தின் அடுத்தடுத்த ப்ரமோஷன்கள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், ரசிகர்களின் கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன.

படத்தின் பிரமோஷனின் ஒரு பகுதியாக லோகேஷ் கனகராஜ் படம் குறித்த பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் இந்தப் படம் LCUவில் இடம் பெறாது என்றும் படம் லியோ தாஸின் யூனிவர்சாக அமைந்துள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும் படத்தின் இசை வெளியீடு கேன்சல் ஆனதற்கான காரணத்தையும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சினையே இதற்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல கூட்ட நெரிசலை தவிர்க்கவே லியோ இசை வெளியீட்டு நிகழ்ச்சியை ரத்து செய்ததாகவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும் இந்தப் படத்தின் மாஸை வெளிப்படுத்த இசை வெளியீடு நிகழ்ச்சி அவசியமில்லை என்பதை தானும் விஜய்யும் நன்றாக உணர்ந்திருந்ததாகவும் சரியான கதைக்களம் இருந்தால் அதுவே ப்ளாக்பஸ்டர் வெற்றிக்கு போதுமானது என்றும் லோகேஷ் கூறியுள்ளார். ஆடியோ வெளியீட்டில் பேச வேண்டிய விஷயங்களை சக்சஸ் மீட்டில் பேசுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இயக்குநராக சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக நடிகராகவும் களமிறங்கவுள்ளார். அன்பறிவ் இயக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து அவர் நடிக்கவுள்ளார். மேலும் தயாரிப்பாளராகவும் தன்னுடைய பயணத்தை துவங்கியுள்ள லோகேஷ், அடுத்ததாக ராகவா லாரன்ஸ் லீட் கேரக்டரில் நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதையே அவரே எழுதவுள்ளார்.

இதையடுத்து பாலிவுட்டிலும் படம் தயாரிக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். பாலிவுட்டில் மூன்று ஹீரோக்களை முதன்மை கேரக்டர்களாக கொண்டு படம் தயாரிக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் லோகேஷ் இயக்கத்தில் படத்தில் நடிக்க நடிகர்கள் காத்திருக்கும் நிலையில், அடுத்ததாக தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X