Thalaivar 171: மார்ச் மாதத்தில் சூட்டிங் துவங்கும் தலைவர் 171.. லோகேஷின் வேற லெவல் திட்டம்!
சென்னை: விஜய் -லோகேஷ் கூட்டணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் மாஸாக உருவாகியுள்ளது லியோ. சர்வதேச அளவில் அடுத்த மாதம் 19ம் தேதி படம் ரிலீசாகவுள்ளது.
முன்னதாக மாஸ்டர் படத்தில் இந்தக் கூட்டணி இணைந்திருந்த நிலையில், அந்தப் படத்தில் விஜய்யை ஆசிரியராக காட்டியிருந்தார் லோகேஷ்.
லியோ படத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் த்ரிஷா இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்துள்ள படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்னும் இரு தினங்களில் ரிலீசாகவுள்ளது.

அடுத்த ஆண்டில் சூட்டிங் துவங்கவுள்ள தலைவர் 171 படம்: தமிழகத்தில் ஜெயிலர், ஜவான் ஃபீவர்கள் ஓய்ந்து விட்டன. ரிலீசுக்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ள போதிலும் தற்போதே விஜய்யின் லியோ படம் நெருப்பாக ரசிகர்கள் நெஞ்சில் நிலைநின்றுள்ளது. லியோ படத்திற்கான ரசிகர்களின் காத்திருப்பு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் லண்டனிலும் எதிரொலித்துள்ளது. 6 வார காலத்திற்கு முன்னதாகவே இந்தப் படத்தின் டிக்கெட் புக்கிங் அங்கு துவங்கப்பட்ட நிலையில், அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளது.
லியோ படத்தின் சாட்டிலைட், டிஜிட்டல் என அனைத்து உரிமைகளும் முன்னதாகவே அதிகமான விலைக்கு விற்றுத் தீர்ந்துள்ளன. இந்நிலையில், அடுத்ததாக படத்தின் பிரமோஷனுக்கான பணிகளில் படக்குழுவினர் மும்முரமாகியுள்ளனர். மேலும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் ஒருபுறம் சிறப்பாக நடந்து வருகிறது. இதனிடையே இந்த மாதம் 30ம் தேதி படத்தின் இசை வெளியீடு தமிழகத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக படத்தின் இசை வெளியீடு மலேசியாவில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது அந்தத் தகவலை படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் சமீபத்திய பேட்டியில் மறுத்துள்ளார். இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சி தமிழகத்தில்தான் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளதாகவும் இன்னும் இடம் முடிவாகவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிளும் இன்னும் சில தினங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை முடித்துவிட்டு லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. படம் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்ததப்படத்தில் இணைந்தது குறித்து லோகேஷ் கனகராஜும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டில்தான் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாதத்தில் தலைவர் 171 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது லியோ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிசியாக உள்ள லோகேஷ், அடுத்ததாக அன்பறிவ் படத்தில் நடிகராக அனிருத்துடன் நடிக்கவுள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்து அவர் ரஜினியுடன் தலைவர் 171 படத்தில் இணையவுள்ளார். படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
இதனிடையே ஜெயிலர் படத்தை தொடர்ந்து தன்னுடைய மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். மேலும் டிஜே ஞானவேல் இயக்கத்திலும் அவர் தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு அவர் வரும் நவம்பரில் தன்னுடைய வழக்கமான சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு ஒருமாத காலம் சிகிச்சைக்காக செல்லவுள்ள ரஜினிகாந்த், பிறந்தநாளுக்கு முன்னதாக சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்தே அவர் லோகேஷ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் இணையவுள்ளார்.


Click it and Unblock the Notifications











