நிம்மதியா படம் எடுக்க விடுங்கடா.. தெறிக்கும் தளபதி 67 படத்தின் மீம்ஸ்!

சென்னை : நடிகர் விஜய் மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் இணைந்துள்ளார்.

இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டுள்ள நிலையில் விரைவில் விக்ரம் படத்தை போலவே படத்தின் டைட்டில் டீசர் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ள நிலையில் படம் குறித்த பல்வேறு யூகங்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

விஜய்யின் வாரிசு படம்

விஜய்யின் வாரிசு படம்

நடிகர் விஜய்யின் வாரிசு படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. கடந்த 11ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி இந்தப் படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. பேமிலி சென்டிமெண்டை மையமாக கொண்டு இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியிருந்தார்.

தளபதி 67 பட சூட்டிங்

தளபதி 67 பட சூட்டிங்

இந்தப் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் கூட இன்னும் முடிவடையவில்லை. ஆனால் விஜய்யின் அடுத்தப்படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது. சமீபத்தில் இந்தப் படம் துவங்கியுள்ள நிலையில் படத்தின் டெஸ்ட் சூட் நடத்தப்பட்டுள்ளது. இதில் விஜய், மனோபாலா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

2வது முறையாக கூட்டணி

2வது முறையாக கூட்டணி

வாரிசு படத்தின் சூட்டிங்கின்போதே இந்தப் படம் குறித்த தகவலகள் வெளியான நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு பிறகே படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிடுவேன் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் விஜய்யுடன் அவர் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.

கேங்ஸ்டராக விஜய்

கேங்ஸ்டராக விஜய்

விஜய் இந்தப் படத்தில் 50 வயது கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாகவும் இந்தப் படம் தன்னுடைய 100 சதவிகித படமாக இருக்கும் என்றும் முன்னதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இந்தப் படம் லோகேஷ் யூனிவர்சில் இணையுமா என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.

பல்வேறு யூகங்கள்

பல்வேறு யூகங்கள்

இந்நிலையில் இந்தப் படம் குறித்த பல்வேறு யூகங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. கைதி கார்த்தியுடன் ஜெயிலில் இருந்தவர்தான் விஜய் என்றும் ஏஜெண்ட் விக்ரமின் ஸ்டூடண்ட்தான் விஜய் என்றும் விக்ரம் படத்தில் இடம்பெற்ற சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரை காட்டிலும் விஜய்யின் கேரக்டர் தளபதி 67ல் மிகவும் பயங்கரமாக இருக்கும் என்பது போன்ற பல யூகங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.

தெறிக்கவிடும் மீம்ஸ்

தெறிக்கவிடும் மீம்ஸ்

இதனிடையே, இந்த யூகங்களை போட்டு, லோகேஷ் கனகராஜ் டேய் படத்தை நிம்மதியாக எடுக்க விடுங்கடா என்று கதறுவது போல மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதனிடையே இந்த போஸ்டரை பகிர்ந்துள்ள ரசிகர் ஒருவர், படம் வெளியாகும் வரை இப்படித்தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

 அதிகரித்துள்ள எதிர்பார்ப்பு

அதிகரித்துள்ள எதிர்பார்ப்பு

இதைப் போல பல மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. லோகேஷ் கனகராஜின் விக்ரம் படம் மிகச்சிறந்த வெற்றியை கொடுத்துள்ளது. இதையடுத்து தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்தப் படம் லோகேஷ் யூனிவர்சில் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X