Lokesh: கலைமீது கமல்ஹாசனின் அர்ப்பணிப்பு.. இந்தியன் 2 படமே சாட்சி.. லோகேஷ் கனகராஜ் பாராட்டு!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் உருவாகி கடந்த இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள இந்தியன் 2 படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. லைகா நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 படம் முதல் பாகத்தை போல ரசிகர்களை கவரவில்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இரண்டாவது பாகத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில், சித்தார்த், சமுத்திரக்கனி ஆகியோரின் நடிப்பு மிகப்பெரிய பாராட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளது. படத்தின் அடுத்த பாகத்திற்கும் ரசிகர்களை படக்குழுவினர் தயார் படுத்தியுள்ளனர்.

இந்தியன் 2 படம்: நடிகர் கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் உருவாகி கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரிலீசாகியுள்ளது இந்தியன் 2 படம். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் படத்தின் 2வது பாகமாக மிகவும் பிரம்மாண்டமாக லைகா நிறுவனத்தின் தயாரிப்பாக வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு மிகப் பெரிய அளவில் ப்ரோமோஷன்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருந்தது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் சரியான அளவில் பூர்த்தி செய்யவில்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. படத்தில் பல இடங்களில் லாஜிக் மீறல்கள் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியன் 3 படம்: ஆயினும் படம் சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. படம் இரு தினங்களில் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே இந்தியன் 3 படம் வரும் அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 படத்தின் இறுதியில் இந்தியன் 3 படத்தின் ட்ரெயிலரும் வெளியிடப்பட்டு படத்திற்கான எதிர்பார்ப்பை தற்போது எகிற செய்துள்ளது. இதில் கமல், காஜல் அகர்வாலின் கேரக்டர்கள் சிறப்பாக பார்க்கப்படுகின்றன.
லோகேஷ் கனகராஜ் பாராட்டு: இந்நிலையில் இந்தியன் 2 படத்தை பார்த்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது எக்ஸ் தள பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். கலை மீது கமல் சார் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்பதற்கு இந்தியன் 2 படம் மிகப்பெரிய சாட்சி என்று அவர் கூறியுள்ளார். மேலும் பிரம்மாண்டமான படைப்பை கொடுத்துள்ள இயக்குநர் ஷங்கருக்கும் சிறப்பான பின்னணி இசையை கொடுத்துள்ள இசையமைப்பாளர் அனிருத்திற்கும் லோகேஷ் கனகராஜ் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். இந்தியன் 3 படத்திற்காக காத்திருக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விக்ரம் பட கூட்டணி: முன்னதாக லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான விக்ரம் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்தது. இந்தப் படத்தில் தனது எல்சியூவையும் லோகேஷ் கனகராஜ் இணைத்திருந்த நிலையில், சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை மிரட்டியது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கு ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். தற்போது கூலி படத்தை இயக்கிவரும் லோகேஷ், அடுத்ததாக கைதி படத்தை இயக்கவுள்ளதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











