Lokesh kanagaraj: ஹரீஷ் கல்யாணின் பார்க்கிங் படம்.. லோகேஷ் கனகராஜ் சொன்னத பாருங்க!

சென்னை: நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த படம் பார்க்கிங். டிசம்பர் 1ம் தேதி இந்தப் படம் ரிலீசாகவுள்ளது.

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இந்துஜா நாயகியாக நடித்துள்ளார்.

ஹரீஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான எல்ஜிஎம் படம் சிறப்பாக அமைந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரமும் களைகட்டியுள்ளது.

Director Lokesh kanagaraj hails & wishes Harish kalyans Parking movie

ஹரீஷ் கல்யாணின் பார்க்கிங் படம்: நடிகர் ஹரீஷ் கல்யாண் அடுத்தடுத்த சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் தோனி தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண் நடித்திருந்த எல்ஜிஎம் படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது. இதையடுத்து பார்க்கிங் படத்தில் நடித்து முடித்துள்ளார் ஹரீஷ். எல்ஜிஎம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பார்க்கிங் படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் களைகட்டியது. இதனால் பார்க்கிங் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

டிசம்பர் 1ல் ரிலீஸ்: இந்தப் படம் வரும் டிசம்பர் 1ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலூன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்த இயக்கியுள்ளார். படத்தில் இந்துஜா நாயகியாக நடித்துள்ளார். மேலும் எம்எஸ் பாஸ்கர், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட நடிகர்கள் படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். குறுகிய கால தயாரிப்பாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

களைகட்டியுள்ள ப்ரமோஷன்கள்: படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். த்ரில்லர் ஜானரில் பார்க்கிங் படம் உருவாக்கப்பட்டுள்ளது. பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 1ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக வெளியான படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன.

லோகேஷ் கனகராஜ் வாழ்த்து: இந்நிலையில் பார்க்கிங் படம் குறித்து சிறப்பான விமர்சனங்களை கேட்டு வருவதாகவும் சிறப்பான கதைக்களம் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். படத்தின் வெற்றிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மற்றும் எடிட்டர் பிலோமின் ராஜிற்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

Director Lokesh kanagaraj hails & wishes Harish kalyans Parking movie

அடுத்தடுத்த படங்கள்: இதனிடையே லோகேஷ் கனகராஜின் வாழ்த்துக்களுக்கு படத்தின் தயாரிப்பாளர் சினிஷ் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். ஹரீஷ் கல்யாண் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. நூறு கோடி வானவில், கல்யாணம் செய்வோம், லப்பர் பந்து, டீசல் ஆகிய படங்கள் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வருகின்றன. வளர்ந்துவரும் நடிகரான ஹரீஷ் கல்யாணுக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X