டைரக்டர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா...மருத்துவமனையில் அனுமதி
சென்னை : கொரோனாவின் இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சூர்யா, அமிர்கான், மாதவன் என முன்னணி ஹீரோக்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் தற்போது, விஜய் நடித்த மாஸ்டர் படத்தை இயக்கிய டைரக்டர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது பற்றி லோகேஷ் கனகராஜ் சமூக வலைதள பக்கத்தில், எனது நண்பர்கள், குடும்பத்தினர், நலம் விரும்பிகள் அனைவருக்கும் நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், எனக்கு கோவிட் 19 பாசிடிவ் என கண்டறியப்பட்டுள்ளது. அதனால் நான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இங்கு நன்றாக சிகிச்சை நடந்து வருகிறது. விரைவில் வலிமையுடன் திரும்பி வருவேன் என குறிப்பிட்டுள்ளார்.

மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கமல், ராகவா லாரன்ஸ் நடிக்கும் விக்ரம் படத்தின் வேலைகளில் ஈடுபட்டிருந்தார். இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மற்ற கலைஞர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











