Lokesh Kanagaraj: தலைவர் 171 பட நடிகர்கள் தேர்வில் ரசிகர்களுக்கு அதிக சர்ப்ரைஸ் இருக்கு.. லோகேஷ் பளீச்!

சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இந்தப் படத்தின் ப்ரமோஷன்களில் அவர் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் லியோ படம் மட்டுமில்லாமல் தான் அடுத்ததாக இணையவுள்ள ரஜினிகாந்தின் தலைவர்171 படம் குறித்தும் அப்டேட்களை கொடுத்து வருகிறார்.

Director Lokesh kanagaraj interview on Rajinikanths Thalaivar171 movie

ரஜினிகாந்தின் தலைவர் 171 படம் குறித்து சுவாரஸ்யம் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்: நடிகர் விஜய்யின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது லியோ. லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இந்தப் படத்தின்மூலம் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். முன்னதாக இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ள நிலையில், இந்தப் படத்தின் முழுமையாக தன்னுடைய ஸ்டைலில் விஜய்யை கொண்டு வந்துள்ளதாக லோகேஷ் முன்னதாக தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் படம் ஐமேக்சில் உருவாகியுள்ள நிலையில், நாளைய தினம் படத்தின் முழுமையான வடிவம் உருவாகிவிடும் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். லியோ படத்தின் அடுத்தடுத்த ப்ரமோஷன்களுக்காக அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்துவரும் லோகேஷ் கனகராஜ் படத்தின் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை பகிர்ந்து வருகிறார். லியோ படத்தின் முதல் 10 நிமிடங்களையும் இறுதி க்ளைமாக்ஸ் காட்சிகளான 40 நிமிடங்களையும் தவறவிட்டு விட வேண்டாம் என்று அவர் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தப் படத்தின் புக்கிங்குகள் சர்வதேச அளவில் மாஸ் காட்டி வருகின்றன. தமிழகத்திலும் புக்கிங்குகள் துவங்கியுள்ள நிலையில், ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் புக் செய்து வருவதை பார்க்க முடிகிறது. பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் மிகப்பெரிய அளவில் டிக்கெட் புக்கிங்குகளை ரசிகர்கள் செய்து வருகின்றனர். கேரளா, கர்நாடகாவில் அதிகாலை ஷோக்கள் திரையிடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் ஷோ 9 மணிக்கு துவங்கவுள்ளது.

இதனிடையே தன்னுடைய பேட்டிகளில் ரசிகர்களை கவரும்வகையில் பேசி வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், லியோ படம் குறித்து மட்டுமில்லாமல் அடுத்ததாக ரஜினிகாந்துடன் தான் இணையவுள்ள தலைவர் 171 படம் குறித்தும் பல்வேறு சுவாரஸ்யங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில், நேரடியாக ஐமேக்ஸ் கேமராக்களை வைத்தே படத்தின் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Director Lokesh kanagaraj interview on Rajinikanths Thalaivar171 movie

மேலும் இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு காத்திருப்பதாகவும் அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார். இந்தக் கதையை தான் ரஜினியிடம் கூறியவுடன் தன்னை கட்டியணைத்து, கலக்கிட்ட கண்ணா என்று பாராட்டியதாகவும் லோகேஷ் தெரிவித்துள்ளார். இந்தக் கதையை கேட்டவுடன் ரஜினியின் முகத்தில் அளவுகடந்த உற்சாகத்தை பார்க்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைவர் 171 படத்திற்காக மலையாள ரைட்டர்களுடன் தான் அதிகளவில் கூட்டணி அமைக்கவுள்ளதாகவும் லோகேஷ் தெரிவித்துள்ளார். படத்தில் கூடுதலாக ஸ்கிரீன் ப்ளே மற்றும் வசனங்களை மலையாள ரைட்டர்கள் எழுதவுள்ளதாகவும் லோகேஷ் கூறியுள்ளார். லியோ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு வேலை செய்ததால் மிகப்பெரிய டென்ஷன் இருந்ததாகவும் அதுபோல இல்லாமல் தலைவர் 171 படத்தை ரிலாக்சாக இயக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X