மீண்டும் ட்விட்டரில் இணைந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.. முதல் ட்வீட்டே கெத்தா இருக்கே!
சென்னை : நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தில் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது.
படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இன்றைய தினம் தயாரிப்பு தரப்பு அறிவிப்பு மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ட்விட்டரில் இருந்து விலகியிருந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது மீண்டும் இணைந்துள்ளார்.

நடிகர் விஜய்யின் வாரிசு படம்
நடிகர் விஜய்யின் வாரிசு படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிலீசாகி வசூல்வேட்டை நடத்தி வருகிறது. இந்தப் படம் முன்னதாக கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது படம் பேமிலி ஆடியன்சை கவர் செய்து அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளது. இதனால் தயாரிப்பு தரப்பு மிகுந்த உற்சாகமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறப்பு அம்சங்கள்
குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு கதைக்களம் அமைந்திருந்தாலும், படத்தில் விஜய் படங்களுக்கேயுரிய ஆக்ஷன், காமெடி, நடனம், இசை என பல அம்சங்களை உள்ளடக்கி படம் வெளியாகியுள்ளது. தமன் இசையில் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரஞ்சிதமே, தீ தளபதி, ஜிமிக்கி பொண்ணு என பாடல்கள் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

தளபதி 67 படம்
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 67 படத்தில் இணைந்துள்ளார் விஜய். இந்தப் படத்தின் பூஜை எளிமையாக போடப்பட்டு தற்போது கொடைக்கானலில் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மிஷ்கின், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். முன்னதாக விஜய் உள்ளிட்டவர்கள் இணைந்த டெஸ்ட் சூட்டும் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.

காஷ்மீரில் அடுத்தக்கட்ட சூட்டிங்
இந்நிலையில் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழு காஷ்மீருக்கு பயணம் செய்ய உள்ளது. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், விஜய் காம்பினேஷன் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரி விழாவொன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ் பிப்ரவரி முதல் வாரத்தில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்க்கலாம் என்று ஹின்ட் கொடுத்திருந்தார்.

மீண்டும் ட்விட்டரில் இணைந்த லோகேஷ்
கடந்த சில மாதங்களாக ட்விட்டரில் இருந்து விலகியிருந்த லோகேஷ் கனகராஜ், இன்றைய தினம் மீண்டும் ட்விட்டரில் இணைந்துள்ளார். விஜய்யுடன் மீண்டும் தளபதி 67 படத்தில் இணைந்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து தனது முதல் ட்வீட்டை பதிவு செய்துள்ளார். மேலும் விஜய் -லோகேஷ் இணைந்துள்ள சூப்பர் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.

உறுதிப்படுத்திய தயாரிப்பு தரப்பு
இந்தத் தகவலை தற்போது தளபதி 67 படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் ரத்னகுமார், தீரஜ் வைத்தி மற்றும் லோகேஷ் கனகராஜ் படத்திற்கு வசனம் எழுதவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிப்பு
படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவ் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். நடன இயக்குநராக தினேஷ் இணைந்துள்ளார். விரைவில் படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











