RJ Balaji :ஆர் ஜே பாலாஜி படத்தில் இணையும் லோகேஷ் கனகராஜ்.. வெளியானது சூப்பர் அப்டேட்!

சென்னை : நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் தற்போது சிங்கப்பூர் சலூன் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

கோகுல் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே சில தினங்களுக்கு முன்பு ஆர்ஜே பாலாஜி மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Director Lokesh kanagaraj joins RJ Balajis Singapore saloon movie as a guest appearance

சிங்கப்பூர் சலூன் படத்தில் இணைந்த லோகேஷ் கனகராஜ் : நடிகர் ஆர்ஜே பாலாஜி எல்கேஜி படத்தின்மூலம் நாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். நையாண்டியை அடிப்படையாக கொண்டு, காமெடி ட்ராக்கில் இவரது படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்தப் படஙகளை தொடர்ந்து தற்போது கோகுல் இயக்கத்தில் சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஆர்ஜே பாலாஜி இருவரும் சந்தித்துள்ளனர். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டிங் ஆனது. இதையடுத்து லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் ஆர்ஜே பாலாஜி இணைகிறாரா என்ற கேள்விகள் ரசிகர்களிடையே ஏற்பட்டது. ஆனால் தற்போது அதற்கான விளக்கத்தை ஆர்ஜே பாலாஜி கொடுத்துள்ளார்.

அவருடைய சிங்கப்பூர் சலூன் படத்தில்தான் லோகேஷ் கனகராஜ் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம். இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் அது என்றும் அவர் கூறியுள்ளார். சில நிமிடங்களே வந்து செல்லும் கேரக்டராக இருந்தாலும் இந்த கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே லோகேஷ் மட்டுமில்லாமல் மேலும் இரு பிரபலங்களும் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Director Lokesh kanagaraj joins RJ Balajis Singapore saloon movie as a guest appearance

இதனிடையே படத்தில் லோகேஷ் கனகராஜின் கேரக்டர் குறித்த தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளது. படத்தில் ரியாலிட்டி ஷோ ஒன்று நடைபெறுவதாகவும் அதில் நடுவராக லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் ஒரு நிமிடம்கூட அந்தக் கேரக்டரின் நீளம் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. இயக்கத்தில் மட்டுமில்லாமல் நடிப்பிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு இயக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து நடிக்க லோகேஷ் கமிட்டாகியுள்ளார். இதனிடையே அவரது இயக்கத்தில் உருவாகிவரும் லியோ படத்தின் சூட்டிங்கும் ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மே மாதத்துடன் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து வரும் அக்டோபர் மாதத்தில் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது லியோ படம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X