Lokesh Kanagaraj: இயக்குநர்.. நடிகர்.. தயாரிப்பாளர்.. அடுத்தடுத்த லைன்-அப்பில் மாஸ் காட்டும் லோகேஷ்!
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து அவருக்கு மிகப்பெரிய அளவில் இயக்குநர் அந்தஸ்தை கொடுத்துள்ளன.
கடந்த ஆண்டில் கமல்ஹாசன் லீட் கேரக்டரில் நடித்து வெளியான விக்ரம் படம் லோகேஷ் கேரியரில் மிகச்சிறப்பாக அமைந்தது.

விக்ரம் படத்தின் இன்டஸ்ட்ரியல் ஹிட்டை தொடர்ந்து, அடுத்ததாக லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்தப் படங்கள்: இயக்குநர் லோகேஷ் கனகராஜின் திரைப்பயணம் மாநகரம் படத்தில்தான் துவங்கியது. இந்தப் படத்தை தொடர்ந்து கார்த்தி, கமல்ஹாசன், விஜய் என அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் கைக்கோர்த்து மிகச்சிறப்பான படங்களை கொடுத்துள்ளார் லோகேஷ். மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது விஜய்யுடன் இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் படங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இடம்பெறுவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றனர். ஆனால் அவற்றையெல்லாம் மீறி, தன்னுடைய படங்களை வெற்றிப் படங்களாக மாற்றி வருகிறார் லோகேஷ். கடத்ந ஆண்டில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான லோகேஷின் விக்ரம் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது.
இதையடுத்து தற்போது விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளார் லோகேஷ். இந்தப் படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்துடன் தலைவர் 171 படத்தையும் இயக்க லோகேஷ் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு படத்திற்கும் மாஸான டைட்டில் டீசரை வெளியிடுவதை லோகேஷ் வழக்கமாக கொண்டுள்ள நிலையில், தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசருக்காக ரசிகர்கள் மரண மாஸாக வெயிட் செய்து வருகின்றனர்.

இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக கைதி 2 படத்தை லோகேஷ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் குறித்து லோகேஷ் மட்டுமில்லாமல் நடிகர் கார்த்தியும் அவ்வப்போது பேசி வருகின்றனர். இதையடுத்து, விக்ரம் படத்தில் இடம்பெற்ற சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரை மட்டும் மையமாக வைத்து ஒரு படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து சூர்யாவுடனேயே முன்னதாக அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட இரும்புக்கை மாயாவி படமும் லோகேஷ் லைன் அப்பில் உள்ளது.
தொடர்ந்து தெலுங்கு நடிகர் பிரபாசுடன் லோகேஷ் இணையவுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநராக அடுத்தடுத்து லோகேஷ் இந்தப் படங்களை இயக்கவுள்ள நிலையில், அடுத்ததாக நடிகராகவும் அவர் களமிறங்கியுள்ளார். ஆர்ஜே பாலாஜி லீட் கேரக்டரில் நடித்துள்ள இந்தப் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து அனிருத்துடன் இணைந்து அன்பறிவ் இயக்கத்திலும் அவர் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
லியோ படத்திற்கு பின்பு இந்த படத்தின் சூட்டிங்கில் லோகேஷ் இணையவுள்ளார். இந்நிலையில் தயாரிப்பாளராகவும் பன்முகம் காட்டி வருகிறார் லோகேஷ். தமிழில் ராகவா லாரன்ஸ் -ரத்னகுமார் இணையும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளார் லோகேஷ். படத்தில் நயன்தாரா நாயகியாக கமிட்டாகியுள்ளார். தொடர்ந்து பாலிவுட்டிலும் மூன்று பெரிய ஹீரோக்களை வைத்து படம் தயாரிக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











