தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவை சந்தித்த லோகேஷ் கனகராஜ்... என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?

ஐதராபாத் : நடிகர் மகேஷ்பாபு தெலுங்கு படவுலகின் சூப்பர்ஸ்டாராக இருந்து வருகிறார். இவரது படங்கள் சிறப்பான வசூலை குவித்து வருகின்றன.

சமீபத்தில் வெளியான இவரது சர்க்காரு வாரி பட்டா படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலை குவித்து வருகிறது.

அடுத்ததாக இவர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் மற்றும் ராஜமௌலி இயக்கத்தில் அடுத்தடுத்து இணைந்து நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

நடிகர் மகேஷ்பாபு

நடிகர் மகேஷ்பாபு

தெலுங்கு படவுலகின் சூப்பர்ஸ்டாராக உள்ளார் நடிகர் மகேஷ் பாபு. இவர் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இவரது படங்கள் மற்ற மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்பட்டு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. இதன்மூலம் பான் இந்தியா ஹீரோவாகவும் இவர் மாறியுள்ளார்.

சர்க்காரு வாரி பட்டா படம்

சர்க்காரு வாரி பட்டா படம்

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்க்காரு வாரி பட்டா படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. கீதா கோவிந்தம் என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய பரசுராம் இந்தப் படத்தை இயக்கியிருந்த நிலையில், ரசிகர்களின் அதிகப்பட்சமான எதிர்பார்ப்பை படம் ஏற்படுத்தியிருந்தது.

வசூல்மழையில் சர்க்காரு வாரி பட்டா

வசூல்மழையில் சர்க்காரு வாரி பட்டா

இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிய நிலையில், வசூல்மழையை மட்டும் குவித்து வருகிறது. சர்வதேச பாக்ஸ் ஆபீசில் இந்தப் படம் 200 கோடி வசூலை நெருங்கியுள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படத்தில் முதல்முறையாக மகேஷ்பாபுவிற்கு ஜோடியாகியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

சிறப்பான ஜோடி

சிறப்பான ஜோடி

படத்தில் இவர்களின் ஜோடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக கீர்த்தி சுரேஷ் மகேஷ் பாபுவிற்கு இணையாக பாடல்களில் கலக்கியுள்ளார். சிறப்பான நடனத்தை ஆடியுள்ளார். இதையடுத்து கீர்த்திக்கு கட்அவுட் வைக்கும் அளவிற்கு மகேஷ் பாபு ரசிகர்கள் இறங்கியுள்ளனர்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

இதனிடையே அடுத்ததாக த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு எஸ்எஸ்எம்பி28 படத்திற்காக இணையவுள்ளார். படத்தில் அவருக்கு பூஜா ஹெக்டே ஜோடியாகவுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கவுள்ளதும் உறுதியாகியுள்ளது.

மகேஷ் பாபுவை சந்தித்த லோகேஷ்

மகேஷ் பாபுவை சந்தித்த லோகேஷ்

இதனிடையே விக்ரம் படத்தின் பிரமோஷனுக்காக ஐதராபாத் சென்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அங்கு மகேஷ்பாபுவை சந்தித்து ஒரு மணிநேரம் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லோகேஷின் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்க ஆர்வம் காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பான செய்தி

சிறப்பான செய்தி

மகேஷ்பாபு பான் இந்தியா ஸ்டாராக உள்ள நிலையில், அவரது படங்கள் கண்டிப்பாக சூப்பர் ஹிட்டாகி விடும் என்ற எதிர்பார்ப்பு தயாரிப்பாளர்களிடம் காணப்படுகிறது. அதேபோல லோகேஷ் கனகராஜூம் தனது அடுத்தடுத்த படங்களை ஹிட்டாக்கி வருகிறார். அதனால் இந்த கூட்டணி இணைந்தால் அது ரசிகர்களுக்கு கொல மாசு செய்தியாக இருக்கும்.

விஜய்யை இயக்கும் லோகேஷ்

விஜய்யை இயக்கும் லோகேஷ்

தற்போது விக்ரம் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக விஜய்யின் 67வது படத்தை அவர் இயக்குவது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் விழா மேடை ஒன்றில் பேசிய அவர், இன்னும் இரு வாரங்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் இந்தப் படம் மாஸ் மற்றும் கிளாஸாக உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

விஜய் ரசிகர்கள் உற்சாகம்

விஜய் ரசிகர்கள் உற்சாகம்

இதையடுத்து விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர். தற்போது தளபதி 66 படத்தை இயக்குநர் வம்சி இயக்கிவரும் நிலையில், லோகேஷ் அடுத்தப்படத்தை இயக்கவுள்ளது குறித்து முன்பே தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது லோகேஷும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X