Lokesh Kanagaraj: லியோ அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்கள்.. ஏமாற்றம் தந்த லோகேஷ்!

சென்னை: ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடித்துள்ள இறைவன் படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

நேற்றைய தினம் சென்னையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். இந்தப் படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் பங்கேற்கவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Director Lokesh kanagaraj not able to attend Iraivan pre release function and disappointed Vijay Fans

ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: நடிகர் ஜெயம் ரவி, நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் படம் இன்னும் சில தினங்களில் செப்டம்பர் 28ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. சைக்கோ த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தின ட்ரெயிலர் சமீபத்தில் வெளியாகி மிரட்டியது. தனி ஒருவன் படத்தையடுத்து இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த ஜோடி மீண்டும் தனி ஒருவன் 2 படத்திலும் இணையவுள்ளது.

வாமனன், மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அகமது இந்தப் படத்தை இயக்கி முடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. படத்தின் ரிலீஸ் முன்னதாகவே திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாகவுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏகத்திற்கும் அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையொட்டி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இன்னும் சில தினங்களில் இறைவன் படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன்களை படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர். இந்தப் படத்திற்கான அடுத்தடுத்த பேட்டிகளையும் ஜெயம் ரவி கொடுத்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதியும் பங்கேற்றார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் கலந்துக் கொள்ளவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அவரிடம் லியோ படத்தின் அப்டேட்டை கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால், லியோ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிசியாக உள்ள லோகேஷ் கனகராஜ் கடைசி நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

இறைவன் படம் 2 மணிநேரம் 33 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக அமைந்துள்ளது. பெண்களை தேடிக் கொல்லும் சைக்கோ த்ரில்லர் பிரம்மாவை சிறையிலிருந்து தப்பிக்க விட்டு அவருக்கு தண்டனை தரும் போலீஸ் அதிகாரியாக இந்தப் படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெயிலரிலேயே படத்தின் மேக்கிங் குறித்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ராட்சசன், போர்த்தொழில் படங்களின் வரிசையில் இந்தப் படமும் மிரட்டலான அனுபவத்தை அவர்களுக்கு தரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X