விஜய்யுடன் லோகேஷ் இணையும் தளபதி 67.. ஹீரோயினுக்கு வெயிட்டான ரோலா.. மனம் திறந்த இயக்குநர்!

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது விக்ரம் படம்.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்யின் தளபதி 67 படத்தில் இணைகிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்தப் படத்தில் நாயகியாக சமந்தா மீண்டும் விஜய்யுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி 66 படத்தில் விஜய்

தளபதி 66 படத்தில் விஜய்

நடிகர் விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் சென்னையில் துவங்கியுள்ளது. படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஷாம் உள்ளிட்டவர்கள் விஜய்யுடன் இணைந்துள்ளனர். தற்போது சென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது.

லோகேஷுடன் இணையும் விஜய்

லோகேஷுடன் இணையும் விஜய்

இதையடுத்து தளபதி 67 படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இணையவுள்ளார். இந்தப் படம் லோகேஷின் 100 சதவிகித படமாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சமந்தா விஜய்க்கு ஜோடியாக உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கத்தி, தெறி மற்றும் மெர்சல் ஆகிய படங்களில் விஜய்யுடன் சமந்தா இணைந்து நடித்துள்ளார்.

சமந்தா ஜோடி?

சமந்தா ஜோடி?

இதனிடையே இந்தப் படத்தில் சமந்தா விஜய்யுடன் கமிட்டானால் அது இந்த ஜோடியின் 4வது படமாக அமையும். விஜய் -சமந்தா ஜோடி எப்போதுமே ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக அமைந்து வருகிறது. இந்நிலையில் இந்த தகவல் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முக்கியத்துவம் இல்லாத ஹீரோயின் கேரக்டர்

முக்கியத்துவம் இல்லாத ஹீரோயின் கேரக்டர்

முன்னதாக மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் நேற்றைய தினம் வெளியாகியுள்ள விக்ரம் என நான்கு வெற்றிப்படங்களை அடுத்தடுத்து கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ், தன்னுடைய படங்களில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்படுகிறது.

பவர்புல் கேரக்டர்

பவர்புல் கேரக்டர்

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ள லோகேஷ் கனகராஜ், தன்னுடைய அடுத்த படத்தில் ஹீரோயின் ரோல் மிகவும் பவர்புல்லாக அமையும் என்று தெரிவித்துள்ளார். இதனால் இந்தப் படத்தில் சமந்தா கமிட்டாகும் பட்சத்தில் அவருக்கு சிறப்பான கேரக்டர் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

20 ஆண்டுகளுக்கு பிறகு யுவன்?

20 ஆண்டுகளுக்கு பிறகு யுவன்?

இந்நிலையில் இந்தப் படத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2003ல் புதிய கீதை படத்தில் விஜய்யுடன் இணைந்து இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, அதையடுத்து விஜய்யுடன் இணையவில்லை. இந்நிலையில் 20 ஆண்டுகள் கழித்து இந்தக் கூட்டணி மீண்டும் இணையுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Recommended Video

Vikram Public Review | Kamal Haasan | VijaySethupathi | Lokesh Kanagaraj | #vikramfdfs
ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

தளபதி 66 படத்தை காட்டிலும் தளபதி 67 படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இந்தப் படத்தின் அறிவிப்பு விஜய் பிறந்தநாளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து படத்தின் சூட்டிங் அக்டோபர் மாதத்தில் துவங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X