Lokesh kanagaraj: அந்தப் படத்தோட LCUவை முடிக்கப் போறேன்.. உறுதியாக சொன்ன லோகேஷ் கனகராஜ்!
சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கம் மட்டுமில்லாமல் நடிப்பிலும் தான் கில்லி தான் என்பதை நிரூபித்துள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்த படங்களில் தான் எல்சியூவில் இணைய உள்ளது குறித்தும் தனது தற்போதைய பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.
கூலி படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக கார்த்தி நடிப்பில் கைதி 2 படத்தில் இணைய உள்ளது குறித்தும் லோகேஷ் கனகராஜ் தனது பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் நிறைவடைந்துள்ளதாகவும் படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் கழிந்த நிலையில் அனைவரும் வளர்ந்து விட்டதாகவும் டில்லியின் மகளும் வளர்ந்துள்ளதாகவும் அதை ஒட்டி படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் தனது பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் லீட் கேரக்டரில் நடித்தவரும் கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தங்க கடத்தலை மையமாகக் கொண்டு அவர் கதைக்களத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்டு வருகின்றன. ரஜினிகாந்தின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவரை அளவுக்கு அதிகமாக அழைக்கழிக்காமல் இன்டோரிலேயே இந்த படத்தை எடுத்து முடிக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
ரஜினியின் கூலி படம்: தற்போது சென்னையில் இந்த படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று வருகின்றனர். இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாக தற்போதைய பேட்டியில் லோகேஷ் உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து கைதி 2 படத்தின் சூட்டிங் 3 மாத இடைவெளியில் அடுத்ததாக துவங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கைதி 2 படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை தான் முடித்துள்ளதாகவும் இந்த கதைக்களத்தை கார்த்திடம் சொல்லி ஓகே வாங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லோகேஷின் எல்சியூ படங்கள்: கைதி படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அனைவரும் வளர்ந்து விட்டதாகவும் டில்லியின் மகளும் தற்போது பெரிய அளவில் வளர்ந்துள்ளதாகவும் இதையொட்டியே கைதி 2 படம் உருவாகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அடுத்ததாக சூர்யா நடிப்பில் ரோலக்ஸ் படத்தை எடுக்க உள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் 2 படத்தை கமல்ஹாசன் நடிப்பில் உருவாக்க உள்ளதாகவும் இந்த இந்த மூன்று படங்களுடன் எல்சியூ கனெக்சன் நிறைவடையும் என்றும் அவர் தன்னுடைய பேட்டியில் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
ரோலக்ஸ் படம்: சூர்யாவுடன் இணைந்து ரோலக்ஸ் மற்றும் இரும்புக்கை மாயாவி என அடுத்தடுத்த படங்களில் லோகேஷ் கனகராஜ் இணையவுள்ளதாக சூர்யா தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் முதலில் எந்த படத்தை லோகேஷ் கையில் எடுக்கப் போகிறார் என்பது குறித்து அவர் தெளிவுபடுத்தவில்லை. இந்நிலையில் தற்போது அடுத்ததாக ரோலக்ஸ் படத்தை சூர்யா நடிப்பில் தான் இயக்க உள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். விக்ரம் படத்தில் சில நிமிடங்களே வந்த போதிலும் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ரசிகர்கள் உற்சாகம்: தற்போதும் பொதுவெளிகளில் படக்குழுவினர் ரோலக்ஸ் கேரக்டர் குறித்து அடுத்தடுத்த கேள்விகளை எதிர் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கூலி மற்றும் கைதி 2 படங்களை தொடர்ந்து ரோலக்ஸ் படத்தை இயக்க உள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளது ரசிகர்களை மிகப்பெரிய உற்சாகத்திற்கு கொண்டு சென்றுள்ளது. மேலும் இநதப் படம் எல்சியூவில் இணையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளது ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











