Rajinikanth: காலா பட ஸ்டைலில் ரஜினி அதிரடி.. லுக் டெஸ்ட் ஓவர்.. சூட்டிங் அப்டேட் கொடுத்த லோகேஷ்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து முன்னணி மற்றும் இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து கவனிக்கத்தக்க வகையில் படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக அமைந்தது.
இதையடுத்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த லால் சலாம் படம் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்நிலையில் லோகேஷ் கனகராஜுடன் ரஜினிகாந்த் இணையவுள்ள கூலி படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் -இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் அறிவிக்கப்பட்டுள்ளது கூலி படம். இந்த படத்தின் ஷூட்டிங் இம்மாதமே துவங்கவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது. முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ப்ரமோ ஆகியவை வெளியாகி ரசிகர்களை சிறப்பாக கவர்ந்தது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது ரஜினியின் கூலி படத்தை மிகவும் கவனமாக அதே நேரத்தில் ரிலாக்ஸாக இயக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் சூட்டிங் அப்டேட்: அடுத்த மாதத்தில் சூட்டிங் துவங்கவுள்ள இந்த படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டத்தில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் லோகேஷ் கனகராஜ் படத்தில் ரஜினியின் லுக் டெஸ்ட் ஓவர் என்று குறிப்பிட்டு, கூலி படத்தில் அவரது ஸ்டைலை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த லுக்கில் ரஜினியை மிகவும் ஸ்டைலிஷ்ஷாக மற்றும் அதிரடியாக காண முடிகிறது. அதே நேரத்தில் இந்த லுக் முன்னதாக ரஜினி நடிப்பில் வெளியான காலா படத்தின் லுக்கை ஒத்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அடுத்த மாதம் சூட்டிங்: இதையடுத்து இந்த படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் துவங்க உள்ளதையும் லோகேஷ் கனகராஜ் இந்த பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் ரஜினி ஹீரோ பிளஸ் வில்லன் என நெகட்டிவ் ஷேடிலும் நடிக்க உள்ளதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். படத்தில் மிகவும் அதிகமான அதிரடி சண்டை காட்சிகள் இடம்பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ரஜினிகாந்த் என்றாலே ஆக்ஷன் பிளஸ் என்டர்டெயின்மெண்ட் என்ற நிலை காணப்படும் நிலையில் சமீபத்திய அவரது படங்களில் என்டர்டைன்மென்ட் சிறிது குறைவாகவே காணப்படுகிறது.
ரசிகர்கள் ஆர்வம்: இந்நிலையில் கூலி படத்தில் அவர் எப்படிப்பட்ட கேரக்டரை ஏற்றிருப்பார் என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் இணைவார்கள் என்பது குறித்த அப்டேட்டையும் தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில் முன்னதாகவே படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியவை குறித்த அறிவிப்புகளை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











