இன்னும் ரெண்டே வருஷத்துல சூர்யாவோட இரும்புக்கை மாயாவி சூட்டிங்.. ட்விஸ்ட் வைத்த லோகேஷ்!
சென்னை: நடிகர்கள் கார்த்தி, விஜய், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். முன்னதாக மாநகரம், கைதி, விக்ரம், லியோ படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை இயக்கி வருகிறார்.
கூலி படத்தின் அடுத்தடுத்த ஷூட்டிங்குகள் நடத்தப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்தியுடன் கைதி 2 படத்தில் இணையவுள்ளதாகவும் முன்னதாகவே லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக சில படங்களிலேயே தன்னை நிரூபித்துள்ளார். தன்னுடைய முதல் படமான மாநகரம் படத்திலிருந்து ரசிகர்களின் கவனத்தை சிறப்பாக ஈர்த்த லோகேஷ், அடுத்தடுத்த படங்களில் இதை தொடர்ந்து வருகிறார். இரண்டாவது படமான கைதி படத்தில் நடிகர் கார்த்தியை வைத்து சிறப்பான கதைக்களத்தை கொடுத்திருந்தார். சாக்லேட் பாயாக அடுத்தடுத்து காதல் மற்றும் ரொமாண்டிக் படங்களில் நடித்துவந்த கார்த்தியை இந்த படத்தில் ஆயுள் தண்டனை கைதியாக ஒரு குழந்தைக்கு அப்பாவாக வெளிப்படுத்தினார் லோகேஷ்.
கூலி படத்தின் சூட்டிங்: ஒரே நாள் இரவில் நடக்கும் கைதி படத்தின் கதைக்களம் ரசிகர்களை மிரட்டி வசூல் சாதனை செய்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து விக்ரம், லியோ படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், இந்தப் படங்களிலும் வசூல் சாதனையை தொடர்ந்தார். இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் கூலி படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் அடுத்தடுத்த கட்ட சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் வரும் 16ம் தேதி படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் துவங்க உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள நிலையில் படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இரும்புக்கை மாயாவி படம்: கூலி படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்தியுடன் இணைந்து கைதி 2 படத்தை இயக்க உள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் கொடுத்துள்ள பேட்டியில், முன்னதாக தான் சூர்யாவுடன் இணைந்து செயல்பட நினைத்த இரும்புக்கை மாயாவி படம் குறித்து பேசியுள்ளார். தான் முதன்முதலில் இந்தப் படத்தின் ஸ்கிரிப்டைதான் எழுதியதாகவும் ஆனால், முதலில் மாநகரம் படத்தை இயக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். இரும்புக்கை மாயாவி ஸ்கிரிப்ட் அனைவரையும் கவர்ந்த நிலையில் தனது 2வது படமாகவே இரும்புக்கை மாயாவி படத்தை இயக்க திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் அந்த நேரத்தில் தனக்கு இந்த படத்தை இயக்கும் நம்பிக்கை இல்லாததால் அடுத்ததாக கைதி படத்தை இயக்கியதாகவும் கூறியுள்ளார்.
மிகப்பெரிய பட்ஜெட்: தொடர்ந்து பேசிய அவர், இன்னும் இரண்டு ஆண்டுகளில் இரும்புக்கை மாயாவி படத்தை இயக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மிகவும் பிரம்மாண்டமான தமிழ்நாட்டில் இதுவரை இல்லாதவகையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். உருவாக திட்டமிடப்பட்டிருந்த இரும்புக்கை மாயாவி படத்தில் இணைய நடிகர் சூர்யாவும் முன்னதாக விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் விரைவில் இந்த படம் உருவாக உள்ளதாக போத்தீஸ் கனகராஜ் கூறியுள்ளது ரசிகர்களை உற்சாகத்திற்கு உள்ளாக்கியது


Click it and Unblock the Notifications











