சூர்யா கேரக்டரை பொத்தி பொத்தி வைத்திருந்தோம்... லோகேஷ் கனகராஜ் பளீச்!

சென்னை : உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ளது விக்ரம் படம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்டவர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யா இந்தப் படத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியானபோது, அது அனைவருக்குமே மிகவும் ஆச்சர்யத்தை அளித்தது.

ஆடியோ வெளியீட்டின்போது இந்த தகவலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

விக்ரம் படம்

விக்ரம் படம்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாக உள்ளது விக்ரம் படம். இந்தப் படம் வரும் ஜூன் 3ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தின் ரிலீசுக்காக தற்போது ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருக்கின்றனர்.

கமல்ஹாசனின் எனர்ஜி

கமல்ஹாசனின் எனர்ஜி

படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, சூர்யா, பகத் பாசில், நரேன் உள்ளிட்டவர்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டர்கள், டீசர், ட்ரெயிலர், பாடல்கள் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தின் பத்தல என்ற பாடல் வெளியாகி கமலின் எனர்ஜியை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது.

வித்தியாசமான விஜய் சேதுபதி

வித்தியாசமான விஜய் சேதுபதி

படத்தில் நடிக்கும் வாய்ப்பை தான் லோகேஷை மிரட்டி வாங்கியதாக சமீபத்தில் ஒரு பேட்டியின்போது விஜய் சேதுபதி நகைச்சுவையுடன் தெரிவித்திருந்தார். சமீபத்தில் வெளியான ட்ரெயிலரில் அவரது காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. கண்ணாடியுடன் வித்தியாசமாக காணப்பட்டார் விஜய் சேதுபதி.

கேமியோ ரோலில் சூர்யா

கேமியோ ரோலில் சூர்யா

அதேபோல இந்தப் படத்தில் சூர்யா முக்கியமான கேமியோ ரோலில் நடித்துள்ளது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இதுகுறித்த ரசிகர் ஒருவரின் ஆடியோவும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து ட்ரெயிலர் வெளியீட்டின்போது இந்தத் தகவலை லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தியிருந்தார்.

பொத்தி வைத்த சூர்யா கேரக்டர்

பொத்தி வைத்த சூர்யா கேரக்டர்

இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், படத்தில் சூர்யாவின் கேரக்டரை வெளியில் தெரியாமல் பொத்தி பொத்தி வைத்திருந்ததாகவும் ஆனாலும் அது வெளியில் கசிந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சூர்யாவிடம் தான் அந்த கேரக்டர் குறித்து நேரில் சென்று பேசியதாகவும், அந்த கேரக்டர் பிடித்து சூர்யா உடனடியாக கால்ஷீட் கொடுத்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கமலின் தீவிர ரசிகர்

கமலின் தீவிர ரசிகர்

உலகநாயகனின் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் முன்னணி நடிகர்கள் பலர் இணைந்துள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ட்ரெயிலரில் மிரட்டலான பல காட்சிகளையும் காண முடிகிறது. கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் அவரை எப்படி வெளிப்படுத்தியிருப்பார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X