விஜய், கமல் சூட்டிங் ஸ்பாட்ல எப்படி நடந்துக்கொள்வார்?.. உண்மையை பளீச்சென்று சொன்ன லோகேஷ் கனகராஜ்!
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்தடுத்து 4 படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ளன.
Recommended Video
சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் 200 கோடி ரூபாய் வசூலை உலகளவில் எட்டியுள்ளது. தொடர்ந்து வசூல்வேட்டை நடத்தி வருகிறது.
இதையடுத்து தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இது கேங்ஸ்டர் படமாக எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்தடுத்து 4 படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் தற்போது விக்ரம் என 4 படங்களை இவர் அடுத்தடுத்த வெற்றிப் படங்களாக கொடுத்துள்ளார்.

கடத்தலை மையமாக கொண்ட படங்கள்
இந்தப் படங்கள் ஒவ்வொன்றும் ஒரு ஜானரில் வெளியான போதிலும் கடத்தலை மையமாக கொண்டு இந்தப் படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படங்களில் திரைக்கதை சிறப்பானதாக வடிவமைக்கப்பட்டிருந்தன. சாதாரண ரசிகர்கள் முதல் ஏ கிளாஸ் ரசிகர்கள் வரையும் அனைவரையும் தொடர்ந்து கவர்ந்து வருகிறார் லோகேஷ்.

மிரட்டலான விக்ரம் படம்
சமீபத்தில் வெளியான விக்ரம் படமும் மிரட்டலாக அமைந்துள்ளது. கமல்ஹாசனை ஒரு குழந்தைக்கு தாத்தாவாக்கும் தைரியம் லோகேஷ் கனகராஜ்க்கு உள்ளது. அதை ஏற்று அந்தக் கேரக்டரை சிறப்பாக்கும் துணிச்சல் கமலுக்கும் இருந்துள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியமைப்பும் மிரட்டலாக அமைந்திருந்தது.

தளபதி 67ஐ இயக்கும் லோகேஷ்
இதனிடையே அடுத்ததாக விஜய் படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ். தளபதி 67 படத்தை அவர் இயக்கவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. வரும் 22ம் தேதி விஜய் பிறந்தநாளில் இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜய் குறித்த விஷயங்களை இயக்குநர் லோகேஷ் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

2வது முறையாக கூட்டணி
விஜய்யுடன் முன்னதாக அவர் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள நிலையில், அடுத்ததாக இயக்கவுள்ள தளபதி 67 படம் தன்னுடைய 100 சதவிகித படமாக அமையும் என்று தெரிவித்துள்ளார். மாஸ்டர் படத்தில் புரிதல் இல்லாமல் இருவரும் இருந்ததாகவும் தற்போது ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எளிமையான விஜய்
இதனிடையே விஜய் மிகவும் எளிமையானவர் என்றும், சூட்டிங்கின்போது செட்டிற்கு வரும் விஜய், செட்டில் இருக்கும் அனைவருக்கும் கைகொடுத்துவிட்டே உள்ளே வருவார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதுபோன்ற ஒரு எளிமையை தான் எவரிடமும் பார்த்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் எளிமை
இதேபோல நடிகர் கமல்ஹாசனும் செட்டில் யார் வந்தாலும் எழுந்து நின்று அவர்களிடம் பேசிவிட்டுதான் உட்காருவார் என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஸ்டாருக்கும் இது ரசிகர்களை கவரும் ஒரேவழி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விக்ரம் படம் கொடுத்துள்ள சிறப்பான வெற்றியை தொடர்ந்து தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











