மாஸ்டர் மாதிரி இல்லை.. விக்ரம் 100 சதவிகிதம் என்னோட படமா இருக்கும்.. லோகேஷ் கனகராஜ் பளீச்!

சென்னை : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ளது விக்ரம் படம். இந்தப் படம் ஜூன் 3ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது.

படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அவர் கமலின் தீவிர ரசிகராகவும் உள்ள நிலையில், கமலை எப்படி படத்தில் கொண்டுவந்துள்ளார் என்ற எதிர்பார்ப்பு ரசகிர்களிடையே காணப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படம் குறித்த பல விஷயங்களை அவர் தனியார் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

விக்ரம் படம்

விக்ரம் படம்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ளது விக்ரம் படம். அவரது முந்தைய வெற்றிப்படமான விக்ரம் படத்தின் தலைப்பை மட்டும் எடுத்துக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகவுள்ள கமலின் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமலின் தீவிர ரசிகர்

கமலின் தீவிர ரசிகர்

மேலும் மாநகரம், கைதி, மாஸ்டர் என ஒவ்வொரு படத்திலும் மாஸ் நடிகர்களுடன் இணைந்து படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளதும் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளது. லோகேஷ் கமலின் தீவிர ரசிகர் என்ற வகையில், கமலின் நடிப்பை எவ்வாறு சிறப்பாக்கியுள்ளார் என்பது குறித்தும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சிறப்பான பிரமோஷன்

சிறப்பான பிரமோஷன்

இந்தப் படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் பிரமோஷனை சிறப்பான வகையில் படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு பிரம்மாண்டமான வகையில் நடத்தப்பட்டது.

சிறப்பான கேமியோ

சிறப்பான கேமியோ

தொடர்ந்து படத்தில் சூர்யாவும் முக்கியமான கேமியோ ரோலில் நடித்துள்ளதும் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. அவரது கேரக்டர் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் அமைந்துள்ளதாக முன்னதாக கமல்ஹாசன் கூறியுள்ளது சூர்யா கேரக்டர் குறித்த எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

100% என்னுடைய படம்

100% என்னுடைய படம்

இந்நிலையில் தனியார் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், விஜய்க்கு பெரிய ரசிகர்கள் வட்டம் இருந்ததால் அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் மாஸ்டர் படத்தை 50 சதவிகிதம் தன்னுடைய படமாகவும் 50 சதவிகிதம் விஜய்யின் படமாகவும் எடுத்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் விக்ரம் படம் 100 சதவிகிதம் தன்னுடைய படமாக இருக்கும் என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

கமல் கொடுத்த சுதந்திரம்

கமல் கொடுத்த சுதந்திரம்

கமல் எப்போதுமே சிறப்பான இயக்குநராக இருப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுவார் என்று பேசிய அவர், மற்றவர்கள் கூறுவது போல அவர் தன்னுடைய இயக்கத்தில் தலையிடவில்லை என்றும் தன்னுடைய போக்கிலேயே படத்தை இயக்கும் சுதந்திரத்தை அவர் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Recommended Video

விடியலை யார் பார்க்கணும்னு நான் தான் முடிவு பண்ணுவேன்!... Surya இருக்காரா? | Filmibeat Tamil
முழுமையான நம்பிக்கை

முழுமையான நம்பிக்கை

தயாரிப்பாளராகவும் அவர் தன்னுடைய வேலைகளில் தலையிடவில்லை என்றும் கடந்த இரு வாரங்களுக்கு முன்புதான் அவருக்கு படத்தை போட்டுக் காட்டியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். கமல் தன்னை முழுதாக நம்பி இந்த படத்தை ஒப்படைத்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X