Lokesh kanagaraj: சீக்கிரத்துலயே நடக்கும்.. சூப்பர்ஹிட் காம்பினேஷனுக்கு அடிபோடும் லோகேஷ் கனகராஜ்!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தில் துவங்கிய பயணத்தை தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் கூலி படத்தில் தொடர்ந்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக்குடன் கைதி 2 படத்திலும் சூர்யாவுடன் இரும்புக் கை மாயாவி, ரோலக்ஸ் படங்களிலும் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் பகத் ஃபாசிலுடன் தான் விரைவில் கூட்டணி அமைக்க உள்ளதாக லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது இந்த பேட்டி ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கைதி 2 படத்தில் அல்லது ரோலக்ஸ், விக்ரம் 3 எந்த படத்தில் இவர்களது கூட்டணி இணையும் என்பது குறித்து விரைவில் தெரியவரும்.

lokesh kanagaraj coolie movie fahad faasil

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. மாநகரம் படத்தில் துவங்கிய லோகேஷ் கனகராஜின் திரைப்பயணம், தற்போது ரஜினிகாந்துடன் இணைந்துள்ளது. கடந்த ஆண்டில் விஜய், திரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் வெளியாகி மாஸ் காட்டியது, இந்த படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் அமைந்தது. ஆனால் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. குறிப்பாக படத்தின் இரண்டாவது பாதி அதிகமான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றிருந்தது.

லோகேஷ் கனகராஜ் விளக்கம்: இந்த விமர்சனங்களை தன்னுடைய கவனத்தில் ஏற்றுக்கொண்டு தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் கதைக்களங்களை தான் எதிர்கொள்வேன் என்று லோகேஷ் கனகராஜ் முன்னதாக பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அடுத்ததாக ரஜினிகாந்துடன் இணைந்து கூலி படத்தின் ஷூட்டிங்கை மேற்கொண்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படம் தங்க கடத்தலை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டர்கள், டைட்டில் டீசர் உள்ளிட்டவை வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது.

lokesh kanagaraj coolie movie fahad faasil

கூலியை தொடர்ந்து கைதி 2: இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்தி கூட்டணியில் கைதி 2 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்த படங்களில் லோகேஷ் கனகராஜ் தன்னை கமிட் செய்து வருகிறார். சூர்யாவுடன் இரும்புக்கை மாயாவி மற்றும் ரோலக்ஸ் படங்களையும் அவர் இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பகத் ஃபாசிலிடம் மேற்கொள்ளப்பட்ட இன்டர்வியூ ஒன்றில் வீடியோ கால் மூலம் பேசிய லோகேஷ் கனகராஜ் விரைவில் பகத் ஃபாசிலுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் அடுத்ததாக கைதி 2 படத்தில் இணைவாரா அல்லது விக்ரம் 3 படத்தின் இவர்களின் கூட்டணி இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மீண்டும் பகத் ஃபாசில் -லோகேஷ் கூட்டணி: விரைவில் இந்த இந்த கேள்விக்கான விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். கடந்த சில தினங்களுக்கு முன்பு கைதி படத்தின் 5 ஆண்டுகள் நிறைவையொட்டி லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சமூக வலைதளத்தில் விரைவில் டில்லி வருவார் என்று கைதி 2 குறித்து உறுதிப்படுத்தியிருந்தார். லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் உருவாக காரணமான கார்த்தி உள்ளிட்டவர்களுக்க அவர் நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது பகத் ஃபாசிலுடன் இணையவுள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து பகத் பாசில் கைதி 2 படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X