Lokesh kanagaraj: விஜய் ஓகே சொன்னால் போதும்.. லியோ 2 குறித்து லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!
சென்னை: நடிகர் விஜய் ஏராளமான ரசிகர்களின் அன்பிற்குரியவராக கடந்த 40 ஆண்டுகளாக சினிமாவில் தொடர்ந்து வருகிறார். சிறுவனாகவே அவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்த நிலையில் தொடர்ந்து நாயகனாகவும் பல படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். அந்த வகையில் இளைய தளபதியாக கொண்டாடப்பட்ட விஜய், தற்போது தளபதியாக மிகப்பெரிய அளவில் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளார். கடந்த ஆண்டில் அவரது வாரிசு மற்றும் லியோ படங்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தன.
இதில் லியோ படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் வெளியாகி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The greatest of all time படத்தில் நடித்து வருகிறார் விஜய். தற்போது தன்னுடைய அரசியல் என்ட்ரியை அறிவித்துள்ள விஜய், அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இதுவே தனது இறுதிப்படம் என்றும் அறிவித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாக தான் செயல்பட உள்ளதாகவும் விஜய் அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் இயக்குனர் சந்திரசேகரின் மகனாகவே திரையில் அறிமுகமானார். சிறுவனாகவே அவர் படங்களில் நடிக்க துவங்கி விட்டார். தற்போது தனது நடிப்பில் 40 ஆண்டு காலத்தை சினிமாவில் அவர் நிறைவு செய்துள்ளார். அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வரும் விஜய், கடந்த ஆண்டில் வாரிசு மற்றும் லியோ படங்களை கொடுத்திருந்தார். இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. முன்னதாக விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்து மாஸ்டர் படத்தையும் கொடுத்திருந்தது.
லியோ படம்: இந்நிலையில் இவர்களது கூட்டணியில் இரண்டாவது படமாக லியோ படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான லியோ படத்தின் இரண்டாவது பகுதி கலவையான விமர்சனங்களுக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The greatest of all time படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் அவர் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், வைபவ் என ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
விஜய்யின் அரசியல் என்ட்ரி: படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடந்து முடிந்துள்ளது. தற்போது தன்னுடைய அரசியல் என்ட்ரி குறித்து அறிவித்துள்ள விஜய் அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடித்து முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் முழு நேர அரசியல்வாதியாக செயல்பட உள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அவரது இந்த முடிவு சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஆயினும் நீண்ட காலங்களாக எதிர்பார்க்கப்பட்ட அவரது அரசியல் என்ட்ரி தற்போது இறுதியாகியுள்ளது குறித்து அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
லியோ 2 குறித்து லோகேஷ் வெளிப்படை: முன்னதாக லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து லியோ 2 படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது தலைவர் 171 படத்தில் இணையுள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து கைதி 2 மற்றும் விக்ரம் 2 படங்களில் தன்னை இணைத்துக் கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது. லியோ 2 படத்தை அவர் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அரசியல் என்ட்ரி கொடுத்துள்ள விஜய்யின் நடிப்புக்கு முழுக்கு என்ற தீர்மானம் லியோ 2 படத்தை கேள்வி குறியாக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ் லியோ 2 படம் குறித்து பேசியுள்ளார்.
விஜய் ஓகே சொன்னால் இயக்குவேன்: நடிகர் விஜய் ஒப்புதல் கொடுத்தால் லியோ 2 படத்தை இயக்க தான் தயார் என்று தெரிவித்துள்ளார். நேரம் காலம் கூடி வந்தால் சினிமாவில் எதுவுமே சாத்தியம்தான் என்றும் அவர் லியோ 2 படம் குறித்து பேசியுள்ளார். ஆனால்விஜய்யின் எண்ணம் வேறாக உள்ளதாக கூறியுள்ள அவர் விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து உள்ளார். தொடர்ந்து பேசிய அவர் தற்போது தலைவர் 171 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் படததின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











