Lokesh kanagaraj: இனிமேல் பாடலை பார்த்து விஜய் என்ன சொல்வார்.. லோகேஷ் சொன்னத பாருங்க!
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து இந்திய அளவில் மோஸ்ட் வான்டட் இயக்குநராக மாறியுள்ளார். கடந்த ஆண்டில் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த படம் லியோ. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையிலும் படம் சூப்பர் ஹிட்டடித்து வசூலையும் குவித்தது. இந்நிலையில் அடுத்ததாக ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்திலேயே துவங்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது படத்தின் சூட்டிங் ஜூன் மாதம்தான் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தலைவர் 171 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் பிஸியாக செயல்பட்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளுக்காக நான்கு முதல் ஐந்து மாதங்களை தான் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகள் நடைபெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தலைவர் 171 படத்தை முடித்துவிட்டு உடனடியாக கைதி 2 படத்தை ஒரே மாதத்தில் துவங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ருதிஹாசனுடன் இணைந்து இனிமேல் பாடலில் நடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த பாடல் இன்றைய தினம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் பாடல் ரிலீசின் போது தான் லோகேஷ் கனகராஜ் மேற்கண்ட தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களான கார்த்தி. கமல்ஹாசன். விஜய் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து பணியாற்றிய அவர் கடந்த ஆண்டில் வெளியான லியோ படத்தையும் வெற்றிகரமாக ரிலீஸ் செய்திருந்தார். இந்த படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டு படத்தின் ஷூட்டிங்கை துவங்கிய லோகேஷ் கனகராஜுக்கு இதனால் படத்தில் சில இடங்களில் சமரசம் செய்து வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அதனால் தான் லியோ படம் ரசிகர்களை கலவையான விமர்சனங்களை பெற்றதாகவும் கூறப்பட்டது.
தலைவர் 171 படம்: இந்நிலையில் தற்போது ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தில் கமிட்டாகியுள்ள லோகேஷ் கனகராஜ், இந்த படத்தில் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் தொடர்ந்து ஒன்றரை ஆண்டு காலம் படத்தை இயக்க உள்ளதாக முன்னதாகவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள இனிமேல் பாடல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஸ்ருதிஹாசன் இசையமைத்து பாடியுள்ள இந்த பாடலில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் பாடலில் இவர்களின் கெமிஸ்ட்ரி மிகச் சிறப்பாக வெளிப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கமல்ஹாசன் வரிகளில் இனிமேல் பாடல்: இந்த பாடலுக்கான வரிகளை எழுதியுள்ள நடிகர் கமல்ஹாசன் பாடலை தயாரித்தும் உள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள இந்த பாடல் ரிலீசின்போது பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய லோகேஷ் கனகராஜ், பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார். அப்போது விஜய் இந்த பாடலை பார்த்தாரா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய லோகேஷ் கனகராஜ், விஜய் இந்த பாடலை இன்னும் பார்க்கவில்லை என்றும் அவர் கேரளாவில் ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இன்றிரவு தான் விஜய்யிடம் இந்தப்பாடல் குறித்து பேச உள்ளதாகவும் கூறியுள்ளார்.
விஜய் என்ன சொல்வார்?: விஜய் கேரளாவில் ஷூட்டிங்கை நிறைவு செய்து இரு தினங்களுக்கு முன்பே சென்னை திரும்பியுள்ள நிலையில் அது குறித்த அப்டேட் இல்லாமல் விஜய் கேரளாவில் ஷூட்டிங்கில் உள்ளதாக லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. முன்னதாக மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் சில காட்சிகளில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் இனிமேல் பாடலில் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடித்துள்ளது குறித்து என்ன சொல்வார் என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











